Magnesium

வெள்ளரியில் மெக்னீசியம் சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • முதிர்ந்த இலைகளில் நரம்பிடைப் பகுதிகளில் வெளிர் மஞ்சள் நிறம் தோன்றி இலை முழுவதும் பரவும்
  • நரம்புப் பகுதிகள் மட்டும் பச்சை நிறத்தில் காணப்படும்
  • இலை ஒரங்கள் பச்சை நிறமாக இருக்கும்

நிவர்த்தி

  • இலை வழியாக மெக்னீசியம் சல்பேட்(5 கிராம் /லிட்டர்) கரைசலை 10 நாட்கள் இடைவெளியில் அறிகுறிகள் மறையும்வரைத் தெளிக்கவேண்டும்