இளம் இலைகளில் முதலில் நரம்புகள் தவிர மற்ற பகுதிகள் இளம் பச்சையாக மாறும்.
தீவிர பற்றாக்குறையினால் மஞ்சள் நிறப் பகுதிகளில் பழுப்பு நிறத் திட்டுகள் தோன்றும்.
சுண்ணாம்புச்சத்து அதிகமாக உள்ள நிலங்களில் இக்குறைபாடு தோன்றும்.
நிவர்த்தி
பெர்ரஸ் சல்பேட்டையும் (5 கிராம்) யூரியாவையும் (10 கிராம்) ஒரு லிட்டர்நீரில் கரைத்து, 10 நாட்கள் இடைவெளியில், அறிகுறிகள் மறையும் வரைத் தெளிக்க வேண்டும்.
சுண்ணாம்புச்சத்து அதிகம் உள்ள நிலங்களில் தழைச்சத்து, தொழு உரம் இடவேண்டும்.