தோட்டக்கலை :: நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறை & குறைபாடுகள் :: கொய்யா

Boron போரான்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்:

புதிதாகத் தோன்றும் இலைகளில் சிவப்புப் புள்ளிகள் தோன்றும். இலைகள் வறண்டும், உடையும் தன்மையுடனும் காணப்படும். பழங்களில் கருப்புத் திட்டுகள் ஆங்காங்கு தோன்றும். கிளைகளில் வெடிப்பு ஏற்படுவதும். கிளைகள் காய்வதம் ஏற்படலாம்.

நிவர்த்தி :

பூப்பதற்கு 15 நாட்களுக்கு முன்பு, நூறு லிட்டர் நீரில் 300 கிராம் போரிக் அமிலம் கலந்த கரைசலை, இலைகள் நன்றாக நனையும்படித் தெளிக்க வேண்டும்.