தோட்டக்கலை :: நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறை & குறைபாடுகள் :: மாம்பழம்
மாவில் மணிச்சத்து பற்றாக்குறை
அறிகுறிகள் :
முதிராத நிலையில் வளர்ச்சி குறைந்து காணப்படும். முதிர்ந்த இலைகள் உதிர்ந்துவிடும். கிளைகளின் நுனியில் வரும் சிறிய பச்சை நிற இளம் இலைகள் உள்ள பகுதிகள் பின்னோக்கிக் காய்ந்துவிடும்.
கிளைகள் காய்ந்து காணப்படும்
இலைகளின் நுனி காய்ந்து விடும்
நிவர்த்தி :
சூப்பர் பாஸ்பேட் மண்ணில் கலந்து இடவும்
0.5% ஆர்த்தோ பாஸ்பேரிக் அமிலத்தை மூன்று முறை தழை தெளிப்பாக தெளிக்கவும்