Zinc

மாவில் துத்தநாகச்சத்து குறைபாடு

அறிகுறிகள்

இலைகள் சிறுத்தும், மெலிந்தும், குறுகியும், காணப்படும்
இலைக் காம்புகளின் இடைவெளி சிறுத்து இலைகள் கொத்தாகக் (சிறிய இலை கொத்துநோய்) காணப்படும்

நிவர்த்தி

2 கிராம் துத்தநாக சல்பேட்டை ஒரு லிட்டர் நீரில் கரைத்து பூக்கம் மற்றும் காய் பிடிக்கும் பருவங்களில் 15 நாட்கள் இடைவெளியில் இலைவழியாகத் தெளிக்க வேண்டும்
ஆடி மாதத்தில் 75 கிராம் துத்தநாக சல்பேட், 75 கிராம மாங்கனீசு சல்ஃபேட், 75 கிராம் போராக்ஸ் மற்றும் 250 கிராம் மெக்னீசியம் சல்ஃபேட் ஆகியவற்றை 20 அல்லது 25 கிலோ எருவுடன் கலந்து மரத்தைச் சுற்றிப் பள்ளம் தோண்டி அடியுரமாக இடவேண்டும். இட்டவுடன் நீர் பாய்ச்ச வேண்டும்.