Agriculture
தாவர ஊட்டச்சத்து :: தானியங்கள் :: நெல்

Zinc

நெல்லில் துத்தநாகச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • இலையின் அடிப்பாகத்தில் நடு நரம்பின் இருபுறமும் பட்டையான மஞ்சள் நிறக் கோடுகள் தோன்றும்.
  • சிவப்பு கலந்த பழுப்பு நிறம் கீழ் இலைகளில் காணப்படும்.
  • இலைப் பரப்பு குறைந்துவிடும்.
  • மணி பிடித்தல் காலதாமதாமாகும். வளர்ச்சி சீராக இருக்காது.

நிவர்த்தி

  • மண்ணில் அடியுரமாக 25 கிலோ துத்தநாக சல்பேட் இடவேண்டும்.
  • 5 கிராம் துத்தநாக சல்பேட்டை ஒரு லிட்டர் நீரில் கரைத்து இலை வழியாக 15 நாள் இடைவெளியில் இருமுறை தெளிக்க வேண்டும்.


 

 
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2014

Fodder Cholam