Boron

சோயா மொச்சையில் போரான் சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • இலைகள் மஞ்சள் நிறமாகிவிடும்.
  • இலை நுனி மற்றும் ஒரங்கள் காய்ந்துவிடும். வளரும் நுனி அழுகிவிடும்.
  • வெளிர்தல் ஏற்பட்ட இலைகள் பழுப்பு நிறமாகி உதிர்ந்துவிடும்.
  • குறைந்த எண்ணிக்கையில் காய்கள் உருவாகி முதிர்ச்சி அடைவது தாமதமாகும்.

நிவர்த்தி

  • போராக்ஸ் (3 கிராம் /லிட்டர்) கரைசலை  10 நாட்கள் இடைவெளியில் இருமுறை அறிகுறிகள் மறையும் வரை இலை வழியாகத் தெளிக்க வேண்டும்.
  • போராக்ஸ் (5 கிராம் /எக்டர்) விதைப்புக்கு முன் நிலத்தில் இடலாம்.