|
கரும்பில் இரும்புச்சத்து பற்றாக்குறை |
அறிகுறிகள் |
- இலைகள் வெளுத்தும், மஞ்சள் நிறத்துடனும் காணப்படும்
- இலை நரம்புகள் தெளிவாக வெளிர் பச்சை நிறத்துடன் காணப்படும்
- மஞ்சள் நிறக் கோடுகள் இலை நுனிவரைத் தொடர்ந்து காணப்படும்
- தண்டு மற்றும் வேரின் வளர்ச்சி குன்றிவிடும்
|
நிவர்த்தி |
- 5 கிராம் பெர்ரஸ் சல்பேட் மற்றும் 10 கிராம் யூரியாவை ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்து, இலைவழியாக பத்து நாட்களுக்கு ஒரு முறை தெளிக்க வேண்டும்.
- 25 கிலோ பெர்ரஸ் சல்பேட்டையம் 12.5 டன் தொழு உரத்தையும் அடி உரமாக இடவேண்டும்.
|