கரும்பில் மாங்கனீசு சத்து பற்றாக்குறை
(பகாளா பிளைட்)
அறிகுறிகள்
இலையில் நரம்பின் இடைப்பகுதிகளில் பழுப்பு நிறத் திட்டுக்கள் காணப்படும்.
பழுப்பு நிறத் திட்டுக்கள் நாளடைவில் கருஞ்சிவப்பு நிறமாக மாறி பின் கருகிவிடும்.
நிவர்த்தி
மாங்கனீசு சல்பேட்டை ஒரு எக்டருக்கு 5 கிலோ வீதம் அடியுரமாக இடவேண்டும்
கரும்பின் கரணைகளை ஒரு சதவீதம் மாங்கனீசு சல்பேட் (10 கிராம்/லிட்டர்) கரைசலில் ஊறவைத்து பின்பு நடவேண்டும்.
மாங்கனீசு சல்பேட் ( 5 கிராம்/லிட்டர்) கரைசலை இலை வழியோக 10 நாட்களுக்கு ஒரு முறை தெளிக்க வேண்டும்.