-
இந்திய வேளாண்மை இரண்டாம் பசுமைப் புரட்சியை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறது. பல ஆராய்ச்சிகளையும், கண்டுபிடிப்புகளையும் விட அதை விவசாயிகளிடையே எடுத்துச் செல்வதில் முக்கிய கவனம் செலுத்த வேண்டியுள்ளது. உண்மையான மாற்றமானது, ஒரு விவசாயிக்கும் மற்றொரு விவசாயிக்கும், ஒரு கிராமத்திற்கும் மற்றொரு கிராமத்திற்கும் அதேபோல் பல பகுதிகளுக்கிடையேயும் செய்திகளை பரப்புவதில் தான் இருக்கிறது. அது தகவல் தொழில்நுட்பம் மற்றும் மேம்பாட்டுத் துறையின் மூலமே சாத்தியம்.
-
மனித வள மேம்பாட்டு விரிவாக்கப் பணியில் முக்கியப் பிரச்சனை விவசாயிகளிடம் கருத்துக் கேட்பதுதான். எனினும் தொலைபேசி வழி தகவல் தொழில்நுட்பம் மூலம் விவசாயிகளுக்குத் தேவையான தகவல்கள் உடனுக்குடன் வழங்கப்படுகின்றன. மேலும் இம்றையில் விவசாயிகளின் பிரச்சனைகளும் வழங்கப்பட்ட தகவல்களும் சேகரித்து வழங்கப்படுகின்றன.
-
இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் விவசாயிகளுக்குத் தேவையான தகவல்கள் இலவசமாக உடனுக்குடன் அவர்கள் விரும்பிய வண்ணம் அளிப்பதே ஆகும்.
-
இத்திட்டம் அதன் நிறை, குறைகளை ஆராய்ந்து சரிசெய்து கொள்ளுமளவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பில் பல்வேறு அடிப்படைக் கூறுகள் அமைந்துள்ளன.
-
இச்சேவை நாடு முழுவதும் 1551 என்ற நான்கு இலக்க பொது தொலைபேசி எண்ணின் மூலம் வழங்கப்படுகிறது.
-
விவசாயிகள் நாட்டின் எந்த மூலை முடுக்கில் இருந்தும் அழைக்கலாம். இவ்வாறு விவசாயிகள் சந்தேகம் கேட்கும்போது சேவை மையத்தில் உள்ள வேளாண் பட்டதாரிகள் அந்தந்த ஊர்களின் சொந்த மொழியிலேயே பதில் அளிப்பார்கள்
-
இச்சேவை ஏலத்தில் விடப்பட்டு முறையாகப் பின்பற்றுவோரிடம் அளிக்கப்படுகிறது. இப்போது இது இந்திய அரசின் வேளாண் துறையின் கீழ் டி.சி.ஐ.எல் (TCIL) இன் கீழ் செயல்படுகிறது.
இந்தச் சேவைக்கென 13 தொலைபேசி நிலையங்கள் நிறுவப்பட்டு அதில் 116 பல்வேறு மொழிப்புலமை பெற்ற வேளாண் பட்டதாரிகள் அமர்த்தப் பட்டுள்ளனர். இதன் இரண்டாம் கட்டமாக பதிலளிக்க 123 வல்லுநர்கள் பல வேளாண் கல்லூரிகளிலும், தோட்டக்கலைத் துறையிலிருந்தும் நியமிக்கப்பட்டுள்ளனர். |