த.வே.ப.க வேளாண் இணைய தளம் :: எளிதான பயிர் சாகுபடிக்கு விதை உர கட்டு தொழில்நுட்பம்

ஆய்வுக் களம்

இதுவரை பல இடங்களில் பயிரிட்டு மக்காச்சோளம், நெல், பருத்தி, கார்னேசன், செண்டுமல்லி, காலிப்ளவர், தக்காளி பயிர்களைப் பயிரிட இந்த விதை உர கட்டு தொழில் நுட்ப முறை உகந்ததாக கண்டறியப்பட்டுள்ளது.

விதை உர கட்டுகளின் பயன்கள்

  • விதை உர கட்டு மூலம் விதை, நுண்ணுயிர்கள், உரம் எரு எல்லாம் ஒரே இடத்தில், ஒரே நேரத்தில், ஒரே முறையில் மண்ணில் பதிக்கலாம்.
  • ஊட்டச்சத்துக்கள் சரியான அளவில் பயிர்க்காலம் முழுவதும் பயிர்களுக்கு கிடைக்கின்றது. மேலுரம் இடத்தேவையில்லை.
  • மண்ணின் வளம் குறைவதில்லை. அனைத்து மண் வகைகளுக்கும் ஏற்றது.
  • பயிர் உள்ள வரிசைகளுக்கு இடையே உள்ள இடைவெளியில் களைகள் குறைகின்றதன.
  • நுண்ணுயிர் வித்துக்கலவை தழைச்சத்து நிலை நிறுத்துவதற்கும், மணிச்சத்தினை திரட்டுவதற்கும் உயிரியல் முறையில் நோய்களை கட்டுப்படுத்துவதற்கும் பயன்படுகிறது.
  • பூச்சிக்கொல்லிகள் ஊட்டமேற்றிய எருவினால் தண்டுத் துளைப்பான், இளங்குருத்து உண்ணும் பூச்சி போன்றவற்றின் தாக்குதல் குறைகின்றது.
  • சொட்டு நீர் பாசனத்திற்கும் உகந்தது. நீர்வழியாக உரக்கரைசலை அளிக்க தேவையில்லை.
  • விதை உர கட்டை எளிதில் கிராம தொழில் கூடங்களிலிருந்து பெற்றுக் கொள்வதால் நேரம் மீதமாவதுடன், பணியாளர் தேவை குறைகின்றது.
  • என்னென்ன உரங்கள், எந்த அளவு, எப்பொழுது அளிப்பது போன்ற தகவல்களைப் பற்றி உழவர்கள் அறிந்திருக்க அவசியம் இல்லை.
  • விதை உர கட்டு தயாரிக்கும் பணியில் கிராம மக்களுக்கு ஆண்டு முழுவதும் வேலை கிடைக்கும்.

 

Click to view more Images

 

விதை உர கட்டு தயாரிக்கும் தொழில் நுட்பத்தினை அறிந்து கொள்ள கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உள்ள மண்ணியல் மற்றும் வேளாண் வேதியியல் அமைக்கபட்டுள்ள விதை உர கட்டு இயந்திர அறையிலுள்ள முன் மாதிரி இயந்திரங்களை தொழில் முனைவோரும் சுய உதவி குழுக்களும் பார்வையிட்டு தெரிந்து கொள்ளலாம். விதை உர கட்டு தயாரிக்கும் தொழில் நுட்பத்தினை அறிந்து கொண்டு சுயமாக கிராமங்களில் தொழில் கூடங்களை அமைக்கலாம். ( மேலும் தகவல் அறிய முனைவர் கோ. அருள்மொழிச்செல்வன், பேராசிரியர் மற்றும் முதன்மை ஆராய்ச்சியாளரை தொடர்பு கொள்ளலாம் – 94420227302)

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2015