organic farming
அங்கக வேளாண்மை :: உயிராற்றல் வேளாண்மை

உயிர்சக்தி 500 மாட்டுக் கொம்பு உரம்


இது சாணத்தை பயன்படுத்தி நொதிக்கப்படுகிறது. மண் வளத்தை மேம்படுத்துவதற்கும், தரமற்ற மண்ணைப் புதுப்பிப்பதற்கும் இந்த உரம் பயன்படுகிறது. மாட்டுக் கொம்புகள் செப்டம்பர் / நவம்பர் மாதத்தில் புதைக்கப்பட்டு, பிப்ரவரி / மார்ச் மாதத்தில் வெளியே எடுக்கப்படுகிறது. நிலம் நல்ல காற்றோட்டமாக இருக்கும் பொழுதும், குளிர் காலத்தில் மண்ணின் சக்திகள் அதிகளவில் இயங்கும் பொழுது இந்த முறையை பின்பற்றுதல் வேண்டும்.

biodynamic

தேவையான பொருட்கள்:

  • மாட்டுக் கொம்புகள்
  • பால் சுரக்கக் கூடிய பசுவின் சாணம். 50 - 150 கிராம் அளவு சாணம் / கொம்பு (கொம்பின் அளவைப் பொறுத்து)

தயாரிப்பு முறைகள்:

  • உயிர்சக்தி 500 தயாரிப்பதற்காக, சாணம் சேகரிக்கும் 2 நாட்களுக்கு முன்னர் மாடுகளுக்கு அதிகத் தரமுள்ள தீவனத்தை அளிக்க வேண்டும். (நல்ல பச்சைத் தீவனம், குறைவான புரோட்டீன் உள்ள செயற்கைத் தீவனம்)
  • புதைக் குழியை 18” ஆழத்துக்கு தோண்ட வேண்டும். நீர் வழிந்தோடாமல், ஆழமான வேர்ப்பகுதி அல்லது மண்புழுக்கள் இல்லாமல் இந்த குழி இருக்க வேண்டும். உயிர்சக்தி எந்த மண்ணில் தயாரிக்கிறோமோ அந்த மண்ணின் இயல்பு இந்த உயிர்சக்திக்கு வரும். இதனால் நல்ல தரமுடைய நிலத்தை குழிக்காக தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • எந்த விதமான பூச்சு இல்லாமல் மாட்டுக் கொம்புகளை சேகரிக்க வேண்டும்.
  • சாணத்தை சேகரிக்க வேண்டும்.
  • மாட்டுக் கொம்புகளை சாணத்துடன் அக்டோபர் / நவம்பர் மாதத்தில் சேர்க்க வேண்டும்.
  • கொம்புகளின் அடிப்பகுதி 1” அளவுக்கு கீழ்நோக்கி, 50 சதவீதம் மட்கிய உரம் மற்றும் மண் சுற்றியும் இருக்குமாறு புதைத்து வைக்க வேண்டும்.
  • மண்ணைக் கொண்டு குழியை மூடி, 4 - 6 மாதத்திற்கு வைக்க வேண்டும். மண் வளமாக இல்லையென்றால், 50 சதவீத மட்கிய உரத்தைச் சேர்ப்பதால் மண் வளத்தை அதிகப்படுத்தலாம்.
  • குழியை ஈரப்பதத்துடன், நிழலுடன், 200 செல்சியஸ் தட்பவெப்ப நிலையில் களை மற்றும் மண்புழுக்கள் இல்லாமல் வைத்திருக்க வேண்டும்.
  • 4 மாதத்திற்கு பிறகு சாணம் நொதித்து இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். மாட்டு கொம்பு ஒன்றைத் தோண்ட வேண்டும். பச்சை சாணம் மண் வாசனையுடன் கூடிய, அடர்ந்த நிறத்தில் உள்ள தாவரமக்காக (உயிர்சக்தி 500) மாறியிருந்தால், அது பயன்படுத்துவதற்கு தகுதியாகிறது. உயிர்சக்தி 500ஐ எடுத்து பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால், அப்படியே விட்டுவிட வேண்டும்.
arrow arrow arrow arrow biodynamic

அளிக்கும் முறை:
பனிப் பொழியும் போது (அதாவது, மாலை நேரங்களில்) அளிக்க வேண்டும்.

  • 15 லிட்டர் மழை நீர் / சுடுநீரில் (தோராயமாக 15 - 200 செல்சியஸ்) ஒரு ஏக்கருக்கு 25 கிராம் உயிர்சக்தி 500ஐ கலந்து அளிக்க வேண்டும்.
  • தண்ணீரில் கால்சியம், இரும்பு, மற்றத் தாதுக்களின் அளவை சரிபார்க்க வேண்டும்.
  • ஒரு மணி நேரத்திற்கு இடதுப்பக்கம் மற்றும் வலதுபக்கமும் மாற்றி மாற்றி சூழல் போன்று கலக்க வேண்டும்.
  • மாலையில் சூரியன் மறைவதற்கு முன் தெளிக்க வேண்டும்.
  • ஒரு வருடத்திற்கு 4 முறை தெளிக்க வேண்டும். அதாவது பிப்ரவரி, மே, நவம்பர், டிசம்பர் மாதங்களில் .
arrow arrow arrow

சேமிப்பு:

  • மண் பானைகளில் வைத்து தளர்வாக மூட வேண்டும்.
  • பானையைச் சுற்றி தென்னை நார் தக்கையை வைப்பதால், ஈரப்பதமாக எப்பொழுதும் வைக்கலாம்.
  • 250 செல்சியஸ் வெப்ப நிலைக்கு மேல் போகாமல், இருட்டறையில் வைக்க வேண்டும்.
  • ஒரு வருடத்திற்குள் பயன்படுத்தி விட வேண்டும்

விளைவுகள்:

  • வேரின் செயல்களை மேம்படுத்துகிறது.
  • மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளின் வாழ்வை அதிகப்படுத்துகிறது.
  • அமிலத் தன்மை மற்றும் தழைச்சத்தின் அளவை ஒழுங்குப்படுத்துகிறது.
  • நுண் ஊட்டச்சத்துக்கள் வெளி வருவதற்கு உதவுகிறது.
  • முளைப்புத் திறனை அதிகப்படுத்துகிறது.

தகவல்:

  • செல்வராஜ், என்., பி. அனுஷா, எம். குரு சரஸ்வதி, 2006. அங்கக தோட்டக்கலை நிலைத்திருக்கக் கூடிய வேளாண்மையை உருவாக்குகிறது. தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம், உதக மண்டலம்.
  • இந்திய உயிராற்றல் வேளாண்மை கூட்டமைப்பு

 

Updated on Oct 2014