பிடி 502 யேரோ (அக்கிலியா மில்லிஃபோலியம்)
|
தயாரிப்பு |
: |
502 |
செடி அல்லது பொருட்கள் |
: |
யோரோ பூ (அக்கிலியா மில்லிஃபோலியம்) |
தயாரிப்புடன் தொடர்புடையவை |
: |
கந்தகம் (S),
சாம்பல் (P),
நுண்ஊட்டச்சத்து |
கிரகம் |
: |
வெள்ளி |
உறுப்பு |
: |
சிறுநீரகம் |
விளைவு |
: |
நுண் ஊட்டச் சத்துக்களை திரவ வடிவில் உறிஞ்சிக் கொள்ளுவதற்கு பயிர்களுக்கு உதவுகிறது |
இது யேரோ பூக்கள் மற்றும் ஆண் விலங்குடைய சிறுநீர் பை தயாரிக்கப்படுகிறது.
தயாரிப்பு முறை:
- ஆண் மானுடைய சிறுநீர்ப் பை அதனுடைய கொம்புடன் இணைந்து பயன்படுத்தப்படுகிறது. இதனால் பயிர்களின் ஹார்மோன் விளைவை அதிகப்படுத்துகிறது
- ஆண் மானுடைய சிறுநீர்ப்பையும், யேரோ பூக்களின் மணமும் ஒரே மாதிரி இருக்கும்.
- பூக்களுடைய ஹார்மோன் செயலாக்கம் சிறுநீர்ப்பையின் செயலாக்கத்தால் அதிகப்படுத்தப்படுகிறது.
- ஆண் விலங்குடைய சிறுநீர்ப்பையை சுற்றியுள்ள கிளைகளின் மூலம் ஹார்மோன் அமைப்பிலிருந்து சக்தி பெறப்படுகிறது.
- சிறுநீர்ப்பையை ஊத வேண்டும்.
- காற்றில் உலர வைக்க வேண்டும். பின் சிதைந்துவிடும். இந்த சமயத்தில் ஈரமாக வைத்திருப்பதால் மென்மையாக மாற்றப்படும்.
- சிறுநீர்ப் பையின் மேல்பகுதியை வெட்டி ஒரு புனல் வழியாக யேரோ பூக்களை நிரப்ப வேண்டும்.
- செடியின் சாறினைக் கொண்டு இந்த பூக்களை ஈரப்பதமாக்க வேண்டும். பின் பஞ்சைக் கொண்டு இந்த திறப்பை அடைக்க வேண்டும்.
- மூடப்பட்ட கூடைகளில் சேமிக்க வேண்டும். இதனால் எலி மற்றும் இதரப் பூச்சிகளின் தொல்லையிலிருந்து பாதுகாக்கலாம்.
புதைக்கும் மற்றும் வெளியே எடுக்கும் காலம்:
- மார்ச் மாதத்தில் செய்தால் ஹார்மோன் தாக்கத்தைப் பெறலாம்.
- செப்டம்பரிலிருந்து மார்ச் வரை மண் பானையில் வைத்து நிலத்தில் புதைக்க வேண்டும்.
தகவல்:
- செல்வராஜ், என்., பி. அனுஷா, எம். குரு சரஸ்வதி, 2006. அங்கக தோட்டக்கலை நிலைத்திருக்கக் கூடிய வேளாண்மையை உருவாக்குகிறது. தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம், உதக மண்டலம்.
- இந்திய உயிராற்றல் வேளாண்மை கூட்டமைப்பு
Updated on Oct 2014 |