பி. டி. 503 சாமேமில்லி (மெட்டிகுரியா சாமோமில்லா)
|
தயாரிப்பு |
: |
503 |
செடி அல்லது பொருட்கள் |
: |
சாமேமில்லி (மெட்டிகுரியா சாமோமில்லா) |
தயாரிப்புடன் தொடர்புடையவை |
: |
கால்சியம் (Ca),
கந்தகம் (P) |
கிரகம் |
: |
புதன் |
உறுப்பு |
: |
நுரையீரல் சுரப்பிகள் |
விளைவு |
: |
தழைச்சத்தை மட்கிய உரத்தில் நிலைநிறுத்துகிற மண்ணின் வாழ்வை உயர்த்துகிறது |
சாமேமில்லி பூக்களை மாட்டின் குடலுடன் இணைந்து தயாரிக்கப்படுகிறது.
தயாரிப்பு முறைகள்:
அறுவடை:
- இதழ்கள் மட்டமாக இருக்கும்போது (காலை 10 மணி அளவில்) பூக்களைப் பறிக்க வேண்டும்.
- 2 வரிசை இதழ்களுடன் உள்ள பூக்கள் தான் இந்த தயாரிப்புக்கு ஏற்றது.
- அறுவடை செய்த பின் உலர வைக்க வேண்டும்.
சேமித்தல்:
காற்றுப் புகாத கொள்கலன்களில் சேமிக்க வேண்டும்.
தயாரிப்பு முறை:
- மாடு அல்லது எருதுடைய குடலைப் பயன்படுத்தலாம்.
- குடலை கழுவக் கூடாது.
- 15 செ.மீ துண்டுகளாக வெட்ட வேண்டும்.
- பால் கறப்பது போல் கையை வைத்து, குடலின் உள்ளே உள்ள செறிக்காத பொருட்களை அழுத்தி எடுக்க வேண்டும்.
- துண்டுப் பகுதிகளின் ஓர் ஓரத்தை நூல் கொண்டு கட்டிவிட வேண்டும்.
- புனலை பயன்படுத்தி பூக்களை இதில் நிரப்ப வேண்டும்.
- மிகவும் இறுக்கமாக அல்லது மிகவும் தளர்வாகவோ கட்டக்கூடாது.
- பூக்களால் நிரப்பிய துண்டுகளை கட்டாக கட்டி, மண்பானையில் வைத்து நல்ல வளமான மண் சுற்றியும் இருக்குமாறு வைக்க வேண்டும்.
புதைக்கும் மற்றும் வெளியே எடுக்கும் காலம்:
- அக்டோபரில் புதைத்து, பிப்ரவரி / மார்ச் மாதம் வரை மண்ணில் வைத்திருக்க வேண்டும்.
தகவல்:
- செல்வராஜ், என்., பி. அனுஷா, எம். குரு சரஸ்வதி, 2006. அங்கக தோட்டக்கலை நிலைத்திருக்கக் கூடிய வேளாண்மையை உருவாக்குகிறது. தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம், உதக மண்டலம்.
- இந்திய உயிராற்றல் வேளாண்மை கூட்டமைப்பு
Updated on Oct 2014 |