பி. டீ. 504 இமாலாயன் ஸ்டிங்கிங் நெட்டில் (அர்டிக்கா பர்விஃப்ளோரா)
|
தயாரிப்பு |
: |
504 |
செடி அல்லது பொருட்கள் |
: |
ஸ்டிங்கிங் நெட்டில் (அர்டிக்கா பர்விஃப்ளோரா) |
தயாரிப்புடன் தொடர்புடையவை |
: |
கந்தகம் (S),
சாம்பல்சத்து (K),
கால்சியம் (Ca),
இரும்பு (Fe) |
கிரகம் |
: |
செவ்வாய் |
உறுப்பு |
: |
பித்தப்பை |
விளைவு |
: |
மண் நலத்தை அதிகப்படுத்துகிறது. மண்ணுக்கு தேவையான தனித்தனியான ஊட்டச்சத்துக்களை அளிக்கிறது |
தயாரிப்பு முறை:
- மண்பானைகளில் உலர்ந்த இலைகளைப் போட்டு நிரப்ப வேண்டும்.
- நன்றாக அழுத்தி நிரப்ப வேண்டும்.
- பானையின் மூடி திறந்து இருக்க வேண்டும்.
- பானை நன்றாக வெயில் படும்படி வைக்க வேண்டும்.
(நிரப்புவதற்கு முன் உலர்ந்த இலைகளை இலைகளின் சாறைக் கொண்டு ஈரப்படுத்த வேண்டும்)
புதைக்கும் மற்றும் வெளியே எடுக்கும் காலம்:
- மே, செப்டம்பர் மாதங்களில் அறுவடை செய்ய வேண்டும்.
- ஒரு வருடம் கழித்து செப்டம்பர் மாதத்தில் இந்த தயாரிப்பை வெளியே எடுக்க வேண்டும்.
தகவல்:
- செல்வராஜ், என்., பி. அனுஷா, எம். குரு சரஸ்வதி, 2006. அங்கக தோட்டக்கலை நிலைத்திருக்கக் கூடிய வேளாண்மையை உருவாக்குகிறது. தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம், உதக மண்டலம்.
- இந்திய உயிராற்றல் வேளாண்மை கூட்டமைப்பு
Updated on Oct 2014 |