organic farming
அங்கக வேளாண்மை :: உயிராற்றல் வேளாண்மை

பி. டி. 505 இமாலாயன் ஓக் பட்டை (குர்கஸ் க்ளாக்கா)

தயாரிப்பு : 505
செடி அல்லது பொருட்கள் : ஓக் மரப்பட்டை (குர்கஸ் க்ளாக்கா)
தயாரிப்புடன் தொடர்புடையவை : கால்சியம் (Ca)
கிரகம் : நிலா
உறுப்பு : இனப்பெருக்க உறுப்பு
விளைவு : பயிர் நோய்களை குணப்படுத்தக் கூடிய சக்திகளை வழங்குகிறது

  • ஓக் மரத்தின் பட்டையை பொடிக்க வேண்டும்.
  • ஏதாவது ஒரு வளர்ப்பு பிராணியின் மண்டை ஓட்டைப் பயன்படுத்த வேண்டும்.
  • கால்சியம் சத்துக்காக மண்டை ஓடு பயன்படுத்தப்படுகிறது.
  • பொடித்த ஓக் மரத்தின் பட்டைகளை மண்டை ஓட்டின் குழியில் வைத்து அனைத்து ஓட்டைகளையும் அடைக்க வேண்டும்.
  • மண்டை ஓட்டை ஈரப்பதம் உள்ள சூழ்நிலையில் களை மற்றும் தாவர மக்கு உள்ள இடத்தில் வைக்க வேண்டும். இதனால் பயிர்களுக்கு எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.
  • இந்த தயாரிப்பை வெளியே எடுக்கும்போது ஒருவித மண் வாசனை வெளிவரும்.
  • பின் இந்த வாசனை மெதுவாகக் குறையும்.
  • பூஞ்சான் வளர்ச்சி கூட தென்படும்.
  • அடிக்கடி கிளறிவிட வேண்டும்.

புதைக்கும் மற்றும் எடுக்கும் காலம்:

  • செப்டம்பர் மாதத்தில் புதைத்து, மார்ச் மாதத்தில் வெளியே எடுக்க வேண்டும்

தகவல்:

  • செல்வராஜ், என்., பி. அனுஷா, எம். குரு சரஸ்வதி, 2006. அங்கக தோட்டக்கலை நிலைத்திருக்கக் கூடிய வேளாண்மையை உருவாக்குகிறது. தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம், உதக மண்டலம்.
  • இந்திய உயிராற்றல் வேளாண்மை கூட்டமைப்பு

Updated on Oct 2014