பி. டி. 506 டான்டிலன் (டாராசிக்கம் அஃபிசினாலிஸ்)
|
தயாரிப்பு |
: |
506 |
செடி அல்லது பொருட்கள் |
: |
டான்டிலன் (டாராசிக்கம் அஃபிசினாலிஸ்) |
தயாரிப்புடன் தொடர்புடையவை |
: |
சிலிக்கான் (Si),
அல்லது சிலிசக் அமிலம் |
கிரகம் |
: |
வியாழன் |
உறுப்பு |
: |
கல்லீரல் |
விளைவு |
: |
சிலிக்கான் மற்றும் பொட்டாசியம் இடையேயுள்ள உறவை அதிகப்படுத்துகிறது. இதனால் சிலிக்கான் காஸ்மிக் சக்திகளை மண்ணிற்கு அளிக்கிறது |
மாடுகளின் வயிற்றைச் சுற்றியுள்ள தோலுடன் டான்டிலன் செடியை சுற்றி வைத்து தயாரிக்கப்படுகிறது.
தயாரிப்பு முறை:
- மாட்டினுடைய வயிற்றை சுற்றிய தோலை பயன்படுத்த வேண்டும்.
- டான்டிலன் பூக்கள் ஒளியை எளிதில் கிரகித்துக் கொள்ளும். ஆகவே, இதை மாட்டினுடைய வயிற்றைச் சுற்றிய தோலில் வைக்க வேண்டும்.
- மாட்டினுடைய வயிற்றுத் தோலை கழுவக் கூடாது.
- இதில் டான்டிலன் பூக்களை வைத்து நூல் கொண்டு கட்டிவிட வேண்டும்.
- மண் மற்றும் மக்கிய உரம் கலந்த கலவை உள்ள பானையில் இந்த பையை வைக்க வேண்டும்.
- இந்த தயாரிப்பை வெளியே எடுக்கும் போது மாட்டினுடைய வயிற்றைச் சுற்றியுள்ள தோல் தெரியும் அல்லது சில சமயங்களில் தெரியாது.
புதைக்கும் மற்றும் எடுக்கும் காலம்:
- செப்டம்பர் மாதத்தில் புதைத்து, மார்ச் மாதத்தில் வெளியே எடுக்க வேண்டும்
தகவல்:
- செல்வராஜ், என்., பி. அனுஷா, எம். குரு சரஸ்வதி, 2006. அங்கக தோட்டக்கலை நிலைத்திருக்கக் கூடிய வேளாண்மையை உருவாக்குகிறது. தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம், உதக மண்டலம்.
- இந்திய உயிராற்றல் வேளாண்மை கூட்டமைப்பு
Updated on Oct 2014 |