பி. டி. 507 வேலிரியன் (அஃபிசினாலிஸ்)
|
தயாரிப்பு |
: |
507 |
செடி அல்லது பொருட்கள் |
: |
சாம்பல்சத்து (P) |
தயாரிப்புடன் தொடர்புடையவை |
: |
சிலிக்கான் (Si),
அல்லது சிலிசக் அமிலம் |
கிரகம் |
: |
சனி |
உறுப்பு |
: |
மண்ணீரல் |
விளைவு |
: |
மட்கிய உரம் தயார் ஆவதை அதிகப்படுத்துகிறது. இதனால் பாஸ்பரஸ் மண்ணால் முறையாக பயன்படுத்தப்படுகிறது |
வேலிரியன் பூக்களின் சாறு இந்த தயாரிப்புக்கும் பயன்படுத்தப்படுகிறது.
தயாரிப்பு முறை:
- பறித்த பூக்களை உரல்கல்லில் போட்டு பசைக்குழம்பு போல் செய்ய வேண்டும்.
- 1 : 4 என்ற விகிதத்தில் தண்ணீருடன் கலந்து பாட்டிலில் வைக்க வேண்டும்.
- குளிர்ந்த அறையில் சேமிக்க வேண்டும்.
- ஒவ்வொரு 5 கன மீட்டர் மட்கிய உரத்துக்கு 1 கிராம் (502 – 506) அளவு மற்றும் 10 மி. லிட்டர் 507ஐ 2.5 லிட்டர் தண்ணீரில் 5 சதவீதத்தில் கலந்து பயன்படுத்த வேண்டும். இது திரவ நிலையில் உள்ள உரங்கள் மற்றும் மாட்டு உரக்குழிகளில் சேர்க்க வேண்டும்
புதைக்கும் குழிகள் தயாரிப்பு முறைகள்:
- அளவு: ஆழம் = 12 – 18” : நீளும் = 2 அடி; அகலம் – 2 அடி
- இடம் : நல்ல வடிகால் வசதியுடன் கூடிய மரங்கள் இல்லாத வளமான மண்
- பராமரிப்பு: களை இல்லாமல் இருக்க வேண்டும். குழியைச் சுற்றி தோண்ட வேண்டும். தென்னை நார்க் கழிவுகளைக் கொண்டு மூட வேண்டும்.
- குழியைச் சுற்றி செங்கல் வைத்து கட்ட வேண்டும்
- புதைத்த தேதி, எடுக்கும் தேதி, வரைபட திட்டம், தயாரிப்பு முறை பற்றிய விவரம் குறிப்பிட வேண்டும்
- குழியின் வெப்பநிலை 25 - 300 செல்சியஸ் வரை இருக்குமாறு பராமரிக்க வேண்டும்.
- தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
சேமிப்பு முறைகள்:
- குளிர்ந்த, ஈரப்பதம், இருட்டான நல்ல காற்றோட்டத்துடன் இருக்குமாறு தேர்ந்தெடுக்க வேண்டும்.
- தயாரிப்புக்கான விவரங்கள் அடங்கிய சீட்டுடன் கண்ணாடி குடுவைகளில் வைக்க வேண்டும்.
- சேமிப்பு கலங்களில் குறிப்பாக தென்னை நார் தக்கையில் வைத்து சேமிக்க வேண்டும்.
- 500 மற்ற சி. பி. பி தயாரிப்புக்களை கலங்களில் மட்டமாக சிறிய துவாரத்துடன் வைக்க வேண்டும்.
- இந்த தயாரிப்புக்களை அடிக்கடி திருப்பி ஈரப்பதம் இருக்குமாறு பராமரிக்க வேண்டும்.
தகவல்:
- செல்வராஜ், என்., பி. அனுஷா, எம். குரு சரஸ்வதி, 2006. அங்கக தோட்டக்கலை நிலைத்திருக்கக் கூடிய வேளாண்மையை உருவாக்குகிறது. தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம், உதக மண்டலம்.
- இந்திய உயிராற்றல் வேளாண்மை கூட்டமைப்பு
Updated on Oct 2014 |