organic farming
அங்கக வேளாண்மை :: உயிராற்றல் வேளாண்மை

பி. டி. 508 (ஈக்விசிட்டம் அர்வென்ஸ்)


  • சிலிக்கா அதிக அளவு இருக்கும். தேயிலைப் பயிரின் ஆரம்ப பருவத்தில் பூஞ்சானைக் கட்டுப்படுத்துவதற்கு பயன்படுகிறது.
  • முழு நிலவின் மேலும் (2 – 4 நாட்களுக்கு முன்பு), நிலவு சனிக் கிரகத்திற்கு எதிராக வரும் போதும், B0 50ஐ போன்றே தெளிக்க வேண்டும்.

தேவையான பொருட்கள்:

  • 1 கிலோ ஈக்கிசிட்டம் அர்வென்ஸ் (குதிரைவால் செடி) அல்லது சவுக்கு
  • 10 லிட்டர் தண்ணீர்

தயாரிப்பு முறை:

  • ஈக்கிசிட்டம் அர்வென்ஸ் அல்லது சவுக்கை சுடுநீரில் 2 மணி நேரத்துக்கு கொதிக்க வைப்பதால் அடர்த்தியான தேயிலை நிறமாக மாறும். இதே மாதிரி 2 நாட்களுக்கு செய்ய வேண்டும்.

தெளிக்கும் முறை:

  • 50 கிராம் தயாரிப்பை 10 லிட்டர் நீரில் கரைக்க வேண்டும்.
  • வளர்ச்சிப் பருவத்தின் ஆரம்பத்தில் செடிகளின் மீதோ அல்லது மண்ணின் மீதோ தெளிக்க வேண்டும்.
  • பி. டி. 508 மீதமான பூஞ்சான் பிரச்சனைக்கும் பி. டி. 501 அதிகத் தாக்குதலின் போது நல்ல விளைவைத் தரும்.

தகவல்:

  • செல்வராஜ், என்., பி. அனுஷா, எம். குரு சரஸ்வதி, 2006. அங்கக தோட்டக்கலை நிலைத்திருக்கக் கூடிய வேளாண்மையை உருவாக்குகிறது. தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம், உதக மண்டலம்.
  • இந்திய உயிராற்றல் வேளாண்மை கூட்டமைப்பு

Updated on Oct 2014