மீன் அமிலம் மிகவும் இயற்கை வழியில் பசுந்தாள் கொடுக்க உதவுகிறது. இது பரவலாக ஜப்பான், கொரியா போன்ற நாடுகளில் அங்கக விவசாயிகளால் பயன்படுத்தப்படுகிறது
தேவையான பொருட்கள்: 1 கிலோ மீன் , 1 கிலோ வெல்லம் .
தயாரிப்பு:
- மீன் குடல்களை நீக்கி மற்றும் சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும் . ( குடல் பயன்படுத்துவதால் தீங்கு இல்லை, ஆனால் துர்நாற்றம் வீசக்க்கூடியது) .
- தூள் வெல்லத்தை அதனுடன் சேர்க்கவும்.
- இரண்டையும் பரந்த வாய்ப்பகுதி கொண்ட கண்ணாடி குடுவை ( சிறந்த ) அல்லது பிளாஸ்டிக் ஜாடியை சரியான அளவு ( மிக பெரிய இல்லை ) தேர்தெடுத்து ( தொப்பி ) இறுக்க மூடி காற்று புகாதவாறு இருக்க வேண்டும்.
- ஜாடியை குலுக்க கரைசல் நன்றாக கலந்து விடும். தண்ணீர் சேர்க்க வேண்டாம்.
- முப்பது நாட்களில் நொதித்து விடும்.
- நைலான் வலை பயன்படுத்தி அதை வடிகட்டினால் 300-500 மில்லி அளவிற்கு தேன் போன்ற திரவம் கிடைக்கும்.
- இது தாவரங்களுக்கு ஒரு சிறந்த ஊட்டச்சத்தாக அமைகிறது.
பயன்பாடு: ஒரு லிட்டர் தண்ணீரில் 5 மில்லி சேர்த்து தெளிக்கலாம். பாசன நீருடன் கலந்தும் தெளிக்கலாம் ( ஆனால் குறைந்தபட்சம் மீன் 5 கிலோ மற்றும் வெல்லம் 5 கிலோ பயன்படுத்த வேண்டும்) .
|