அங்கக வேளாண்மை :: உயிர் உரம் : கேள்வி பதில் |
உயிர் உரம் உயிர் உரம் என்றால் என்ன? உயிர் உரங்கள், நன்மை தரும் நுண்ணுயிர்களின் உயிருள்ள முறைப்பாடு . இவற்றை நேரடியாக விதை, வேர் அல்லது மண்ணில் பயன்படுத்தலாம். இவை குறிப்பாக, மண்ணில் கிடைக்கும் ஊட்டச்சத்துக்களை திரட்ட, மற்றும் நுண் தாவர அமைப்பை கட்டமைக்க பயன்படுகிறது. மேலும் மண் நலத்தை மேம்படுத்த நேரடியாக பயன்படுகிறது. கரும்பிற்கான உயிர் உரங்கள் இடும் முறை என்ன? 1. கரும்பிற்கான உயிர் உரங்களின் வகைகள்: கரணை நேர்த்தி : ஒரு ஏக்கருக்கு 100-லிட்டர் தண்ணீரில் 5 கிலோ உயிர் உரங்களை கலந்து அதில் நடவுக்கு முன் கரும்பு கரணையை முழுமையாக நனைத்து எடுக்க வேண்டும். மண்ணில் இடும் முறை: தொழு உரம் 80-100 கிலோ மற்றும் 5 கிலோ உயிர் உரங்களை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து, இந்தக் கரைசலை கரும்பு விதைக் கரணைகளின் மேல் தெளித்து பின் நடவு செய்ய வேண்டும். நடவு செய்யப்பட்ட வரப்புகளை, உடனடியாக மண்ணை போட்டு மூடி விட வேண்டும். நாம் ஏன் உயிர் உரங்கள் பயன்படுத்த வேண்டும்? பசுமை புரட்சியின் அறிமுகங்களான, தொழில்நுட்பங்களின் வருகைக்கு பின்னர் நவீன வேளாண்மை செயற்கை இடுபொருட்களைச் சார்ந்து அமைந்துள்ளது. இவை படிம எரிபொருட்களின் (நிலக்கரி + பெட்ரோலிய) தயாரிப்புகள் ஆகும். இந்த செயற்கை இடுபொருட்களை அளவுக்கதிகமாக மற்றும் சமநிலையற்ற முறையில் பயன்படுத்துவதால் எதிர்மறையான விளைவுகள் ஏற்படுவதைக் காணலாம். இந்த சூழ்நிலைதான் தீங்கற்ற இடுபொருட்களான உயிர் உரங்களை அடையாளம் காண வழிவகுத்தது. மேலும், இந்த உயிர் உரங்களைப் பயிர் சாகுபடியில் பயன்படுத்துவதால், மண்ணின் சுகாதாரம் மற்றும் தரமான பயிர் உற்பத்திப் பொருட்களைப் பெற முடிகிறது. ஆதாரம்: http://www.icrisat.org/vasat/learning_resources/OrganicFAQs/organic_farming.htm |
முதல் பக்கம் | திட்டங்கள் | பயிர்ச்சிகள் | மற்றவை | புகைப்படங்கள் | தொடர்புக்கு| பொறுப்புத் துறப்பு © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016 |