organic farming
அங்கக வேளாண்மை :: உயிர் உரம் : கேள்வி பதில்

உயிர் உரம் 

உயிர் உரங்களைப் பயன்படுத்துவதின் நன்மைகள் என்ன?

  • பயிர் மகசூல் 20-30%  அதிகரிக்கிறது.
  • இரசாயன தழைச்சத்து மற்றும் மணிச்சத்தை 25% குறைக்கலாம்.
  • பயிரின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
  • மண்ணின் உயிரியல் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது.
  • மண்ணின் இயற்கை வளத்தைத் தக்க வைக்கிறது.
  • வறட்சி மற்றும் மண் மூலம் பரவும் நோய்களுக்கு எதிராகப் பாதுகாப்பைத் தருகிறது.

உயிர் உரங்களின் நன்மைகள் என்ன?

  • செலவு குறைவு.
  • செயற்கை உரங்களுக்கு மாற்றுப்பொருளாக இருக்கிறது.
  • இயற்கை சூழலுக்கு ஏற்றது.
  • உரங்கள் பயன்பாட்டின் செலவைக் குறைக்கிறது, குறிப்பாக தழைச்சத்து மற்றும் மணிச்சத்து சம்பந்தப்பட்ட செலவுகளைக் குறைக்கிறது.

என்ன வகையானஉயிர் உரங்கள் உள்ளன?

1. நைட்ரஜன்

  • பயிறு வகை பயிர்களுக்கு ரைசோபியம்.
  • பயிறு வகை அல்லாத பயிர்களுக்கு அசட்டோபேக்டர் / அசோஸ்பைரில்லம்.
  • கரும்புக்கு மட்டுமே அசிட்டோபேக்டர்.
  • தாழ்ந்த நில நெல் வயலில் நீலப்பச்சைப்பாசி மற்றும் அசோலா வளர்க்கலாம்.

2. தழைச்சத்து

  • அனைத்து பயிர்களுக்கும் ரைசோபியம், அசட்டோபேக்டர் / அசோஸ்பைரில்லம், அசிட்டோபேக்டர் உடன் பாஸ்பாட்டிகா இடலாம்.

3. ஊட்டமேற்றிய உரம்

  • செல்லுலோலிட்டிக் பூஞ்சை வளப்பு
  • பாஸ்பாட்டிகா மற்றும் அசடோபேக்டர் வளர்ப்பு

என்ன உயிர் உரங்கள் பயிர்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது?

விதைகள் 10 கிலோ ஒவ்வொன்றிற்கும் விதை நேர்த்தி செய்ய 200 கிராம் ரைசோபியம் + பாஸ்பாட்டிகா, துவரை, பாசிப்பயறு, உளுந்து, தட்டைப்பயிர் நிலக்கடலை மற்றும் சோயாபீன் போன்ற பருப்பு வகைகளுக்குப் பரிந்துரைக்கப்படுகிறது.

ஒரு 10 கிலோ விதைகள் ஒவ்வொன்றிற்கும், 200 கிராம் அசடோபேக்டர் + பாஸ்பாட்டிகா கரைசல் பயன்படுத்தி கோதுமை, சோளம், மக்காச்சோளம், பருத்தி, கடுகு முதலியவற்றிற்கு விதை நேர்த்தி செய்வது பயனுள்ளதாக இருக்கும்.

நடவு செய்யப்பட்ட நெல்லுக்கான பரிந்துரை: நெல் நாற்றுகளின் வேர்களை விதை நேர்த்தி செய்ய அவற்றை 8 லிருந்து 10 மணி நேரம் அசோஸ்பைரில்லம் + பாஸ்பாட்டிகா (ஒவ்வொன்றும் 5 கிலோ/ஹெக்டர்) கரைசலில் நனைத்தல் வேண்டும். 

தொடர்ச்சி.....


ஆதாரம்:

http://www.icrisat.org/vasat/learning_resources/OrganicFAQs/organic_farming.htm    
www.mycorrhizae.com
www.hortsorb.com
http://kendujhar.nic.in/
http://www.greenpeace.org

 
முதல் பக்கம் | திட்டங்கள் | பயிர்ச்சிகள் | மற்றவை | புகைப்படங்கள் | தொடர்புக்கு| பொறுப்புத் துறப்பு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016