உயிர் உரம்
எப்படி உயிர் உரங்கள் பயிர்களுக்கு பயன்படுத்தப்படுகிறது ?
விதை நேர்த்தி:
200 கிராம் நைட்ரஜன் அடங்கிய உயிர் உரம் மற்றும் 200 கிராம் பாஸ்பாட்டிகா இரண்டையும் 300-400 மிலி தண்ணீரில் முற்றிலும் கரைத்து கொள்ள வேண்டும். பத்து கிலோ விதைகளை இந்த பேஸ்ட்டில் விதை நேர்த்தி செய்து, நிழலில் உலர வைக்க வேண்டும். விதை நேர்த்தி செய்த விதைகள் சீக்கிரம் விதைக்கப்பட வேண்டும்.
நாற்று வேர் நனைத்தல்:
நெற்பயிருக்கு, ஒரு படுக்கை வயலில் உருவாக்கப்பட்டு அதில் நீர் நிரப்பபடுகிறது. பரிந்துரைக்கப்பட்ட உயிர் உரங்களை இந்த தண்ணீரில் கலந்து, நாற்றுகளின் வேர்களை 8-10 மணி நேரம் நனைத்து வைக்க வேண்டும்.
மண் நேர்த்தி:
பரிந்துரைக்கப்பட்ட உயிர் உரங்கள் 4 கிலோவை, 200 கிலோ தொழு உரம் உடன் கலந்து ஒரு இரவு முழுவதும் வைக்கப்படுகின்றன. இந்த கலவையை விதைப்பு அல்லது நடவு நேரத்தில் மண்ணில் இடப்படுகிறது.
எப்படி ஒரு உயிர் உர பயன்பாடு நல்ல பலனை அளிக்கிறது?
- உயிர் உர தயாரிப்பு அதற்கான நல்ல பயனுள்ள மற்றும் சரியான சேர்க்கையை கொண்டிருக்க வேண்டும் மற்றும் கிருமிகளின் பாதிப்பு இல்லாமல் இருக்க வேண்டும்.
- சரியான சேர்க்கை உள்ள உயிர் உரங்களை தேர்ந்தெடுத்து, அவற்றை காலாவதியாகும் தேதிக்கு முன் பயன்படுத்த வேண்டும்.
- பரிந்துரைக்கப்பட்ட உயிர் உரம் இடும் முறை மற்றும் சரியான நேரத்தில் பயன்படுத்த முத்திரையில் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளது.
- விதை நேர்த்தி செய்ய போதுமான பிசின் பயன்படுத்த வேண்டும்.
- பிரச்னை உள்ள மண்ணை சரி செய்ய சுண்ணாம்பு அல்லது ஜிப்சம் கொண்டு சிற்றுருண்டையாக்கபட்ட விதைகள் பயன்படுத்த வேண்டும். மண் அமில கார தன்மையை திருத்தம் செய்ய சுண்ணாம்பு பயன்படுத்த வேண்டும்.
- பாஸ்பரஸ் மற்றும் பிற சத்துக்களை விநியோகிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
உயிர் உரங்களை பயன்படுத்த என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்?
- உயிர் உர பாக்கெட்டுகளை நேரடி சூரிய ஒளி மற்றும் வெப்பத்திலிருந்து விலக்கி குளிர்ந்த மற்றும் உலர்ந்த இடத்தில் சேமித்து வைக்க வேண்டும்.
- உயிர் உரங்களை சரியான சேர்க்கைகளில் பயன்படுத்த வேண்டும்.
- ரைசோபியம், ஒரு குறிப்பிட்ட பயிர்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
- மற்ற ரசாயன உரங்களை உயிர் உரங்களில் கலந்து பயன்படுத்த கூடாது.
- ஒரு பொருளை வாங்கும் போது, ஒவ்வொரு பாக்கெட்டிலும் தேவையான தயாரிப்பு பெயர், பயிரின் பெயர் நோக்கம், உற்பத்தியாளரின் பெயர் மற்றும் முகவரி, உற்பத்தி தேதி, காலாவதியாகும் தேதி, தொகுதி எண் மற்றும் பயன்பாடு வழிமுறைகள் போன்ற தகவல்கள் வழங்கப்பட்டு உள்ளதா என்று உறுதி செய்ய வேண்டும்.
- குறிப்பிட்ட பயிர்களுக்கு, உர பாக்கெட்களை அதன் காலாவதியாகும் தேதிக்கு முன், உபயோகப்படுத்த வேண்டும். மேலும் பரிந்துரைக்கப்பட்ட முறையை பயன்படுத்த வேண்டும்.
- உயிர் உரங்கள் நேரடி தயாரிப்பு என்பதால் அவற்றின் சேமிப்பில் அல்லது பராமரிப்பில் தனி அவசியம்.
- மணிச்சத்து, தழைச்சத்து உயிர் உரங்கள் இரண்டையும் சிறந்த பலனை பெறும் வகையில் பயன்படுத்த வேண்டும்.
- இரசாயன உரங்கள் மற்றும் அங்கக உரங்களுடன் இணைந்து உயிர் உரங்களைப் பயன்படுத்துவது முக்கியம்.
- உயிர் உரங்களை, உரங்களுக்கு மாற்றாக பயன்படுத்துவது இல்லை. ஆனால் தாவர ஊட்டச்சத்து தேவைகளுக்குத் துணையாக பயன்படுத்த முடியும்.
நெல் வயல்களில் இடப்படும் அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போபாக்டீரியா உடன் ட்ரைக்கோடெர்மா விரிடி மற்றும் சூடோமோனாஸ் கலக்க முடியுமா?
பொதுவாக அனைத்து நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் ஒன்றுக்கொன்று ஏற்றதாக இருக்கும். அவைகளை ஒன்றாகவோ அல்லது சூழ்நிலைக்கு ஏற்றவாறு தனித்தனியாகவோ பாதுகாப்பாக வயலில் இடலாம்.
தொடர்ச்சி.....
ஆதாரம்:
http://www.icrisat.org/vasat/learning_resources/OrganicFAQs/organic_farming.htm
www.mycorrhizae.com
www.hortsorb.com
http://kendujhar.nic.in/
http://www.greenpeace.org
|