organic farming
அங்கக வேளாண்மை :: உயிர் உரம் : கேள்வி பதில்

உயிர் உரம் 

நாங்கள் இரசாயன உரங்களுடன்  உயிர் உரங்களை பயன்படுத்த முடியுமா?

உரங்கள் இடும் அளவுகள்  மற்றும் தாவரங்களுக்கு உண்மையாக தேவைப்படும் இரசாயன உரங்களின்  அளவுகளிலும்  மிகப் பெரிய வேறுபாடு உள்ளது. உயிர் உரங்கள், தாவரங்களுக்கு தேவைப்படும்  ரசாயன உரங்களை கிடைக்க  செய்வதில் துணை புரிகின்றன. இவ்வாறு உயிர் உரங்களை, ரசாயன உரத்துடன் சேர்த்துப் பயன்படுத்த முடியும். மேலும் உயிர் உரங்களை இரசாயன உரங்களுடன்  கலக்கும் போது தேவையான பாதுகாப்பு  நடவடிக்கைகள்  எடுக்கப்பட வேண்டும். இல்லையெனில் அவை  உயிர் உரங்களில் உள்ள நுண்ணுயிர்களை குறைக்க வாய்ப்பு உள்ளது.

வேர் உட்பூசணம் என்றால் என்ன?

வேர் உட்பூசணம் என்பது மண் பூஞ்சை மற்றும் தாவர வேர்களுக்கு இடையேயான தொடர்பு ஆகும். ஜெர்மனியில் உள்ள ஒரு விஞ்ஞானி 400 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே, 1845 ஆம் ஆண்டு இந்த தொடர்பை கண்டுபிடித்துள்ளார்.

மைக்கோரைஸா பூஞ்சையை  எந்த பயிரின்  வேர்களில்  அறிமுகம் செய்தால்  மிகப் பெரிய நன்மையை கொடுக்கும்?

தரிசு  நிலம்,  நிழ எழிலூட்டும் திட்ட வகைகள், புதிய தோப்பு / பழத்தோட்டம், நிலக்கரி சுரங்க  மீட்பு தளம் ஆகியவற்றில் மைக்கோரைஸா பூஞ்சை பயன்படுத்தபடுகிறது.

மைக்கோரைஸா பூஞ்சை தாவரங்களில் உள்ளதா? நான் நாற்றங்காலில்  மைக்கோரைஸா பூஞ்சையை  வாங்க முடியுமா?

அநேகமாக இல்லை. நாற்றங்காலில் மட்டுமே மைக்கோரைஸா பூஞ்சை செயல்படும். அதை விட்டு  வெளி இடத்திற்கு எடுத்துச்செல்லும் போது, அதாவது வனக்காடுகள், இயற்கை நிலகாட்சிகள்  போன்ற இடங்களில்  இதன் பயன்பாடு குறைவு.

வயலில்  வளரும் தாவரங்களின் வேர்கள், நன்மை செய்யும் மைக்கோரைஸா பூஞ்சையை  கொண்டிருக்குமா?

மிகவும் அதிகபடியான வயல் வேலைகளை மேற்கொள்ளும் நிலத்தில் அல்லது எந்த  தாவர பயிர்கள் இல்லாத நிலத்தில் மைக்கோரைஸா பூஞ்சை சற்று குறைவாகவே காணப்படும்.

தொடர்ச்சி.....


ஆதாரம்:

http://www.icrisat.org/vasat/learning_resources/OrganicFAQs/organic_farming.htm    
www.mycorrhizae.com
www.hortsorb.com
http://kendujhar.nic.in/
http://www.greenpeace.org

 
முதல் பக்கம் | திட்டங்கள் | பயிர்ச்சிகள் | மற்றவை | புகைப்படங்கள் | தொடர்புக்கு| பொறுப்புத் துறப்பு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016