அங்கக வேளாண்மை :: உயிர் உரம் : கேள்வி பதில் |
உயிர் உரம் பல இனமைக்கோரைஸா நுண்ணுயிரிகள் மிகவும் தேவையானதா? பல இனங்கள் கொண்ட மைக்கோரைஸா தேர்வு மிகவும் முக்கியம். ஏனெனில், தேர்ந்தெடுக்கப்பட்ட மைக்கோரைஸா வேர்களைக் கொண்டு விருத்தியடையும் மற்றும் விரைவாக பெருகி ஒற்றை இன மைக்கோரைஸாவை மட்டுமே அதிகரிக்கும். மைக்கோரைஸா பூஞ்சை மண்ணில் ஏற்கனவே இருக்கிறது, ஆனால் ஏன் மறுபடியும் அதை மண்ணில் போட வேண்டும்? மைக்கோரைஸா பூஞ்சை வகைகள் (இனங்கள்) ஏற்கனவே மண்ணில் இருக்கிறது என்றாலும் அவை மண்ணில் வளர்க்கப்படும் தாவர இனங்களுக்கு போதிய அளவு பயனுள்ளதாக இருப்பதில்லை. பயிர்கள் நடவு நேரத்தில் பல்வேறு இன மைக்கோரைஸா பூஞ்சையை உட்புகுத் துவதால், அவை வேர்களில் பல நிகழ்தகவுகளில் பெருக்கமடைந்து மைக்கோரைஸா வேர்களுக்கு தேவையான நன்மைகளை அளிக்கின்றது . தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தில் நான் தாவரங்களை நடும் சமயத்தில், மைக்கோரைஸா பூஞ்சை நுண்ணுயிரி கலவையை இடுவது அவசியமா? ஆராய்ச்சிகளில் கூறப்பட்டு உள்ளது போல், மைக்கோரைஸா பூஞ்சை இனங்களின் நுண்ணுயிரிகலவை இளம் செடிகளில் மிகவும் பயனுள்ளதாக இருப்பதை விட, அதே தாவர இனங்களை சார்ந்த முதிர்ந்த செடிகளில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மைக்கோரைஸா பூஞ்சையைப் பயன்படுத்தி, எந்தத் தாவரங்கள் சிறப்பு வேர்களை அமைக்கும்? உலகின் 90% அதிகமான தாவர இனங்கள் மைக்கோரைஸா பூஞ்சையை பயன்படுத்தி சிறப்பு வேர்களை அமைக்கிறது மற்றும் செயற்கை அல்லாத இயற்கைச் சூழ்நிலையில் அதிகமான செயல்திறனில் ஈடுபடுகிறது. ஆதாரம்: http://www.icrisat.org/vasat/learning_resources/OrganicFAQs/organic_farming.htm |
முதல் பக்கம் | திட்டங்கள் | பயிர்ச்சிகள் | மற்றவை | புகைப்படங்கள் | தொடர்புக்கு| பொறுப்புத் துறப்பு © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016 |