அங்கக வேளாண்மை :: உயிர் உரம் : கேள்வி பதில் |
உயிர் உரம் மைக்கோரைஸா பூஞ்சை எப்படி தாவரங்களில் ஊட்டச்சத்து எடுத்துக்கொள்ளும் அளவை அதிகரிக்கிறது? மைக்கோரைஸா பூஞ்சை, நீர் உறிஞ்சும் பரப்பின் அளவை 10 மடங்கிலிருந்து 100 மடங்கு வரை அதிகரிக்கிறது. இதனால் தாவரங்களில், மண் வளத்தைப் பயன்படுத்தும் திறனை மேம்படுத்துகிறது. தாவரங்களுடன் தொடர்புடைய மண்ணில் உள்ள மைக்கோரைஸா வலைப்பின்னல் அளவுகளின் மதிப்பீடுகள் ஆச்சரியத்துக்குரியது. பல மைல் மைக்கோரைஸா வலைப்பின்னல் ஒரு விரட்சிமிழ் அளவு உள்ள மண்ணில் இருக்கும். மைக்கோரைஸா பூஞ்சை, வேர்களின் உறிஞ்சும் மேற்பரப்பு பகுதியை அதிகரித்து, தாவரங்களுக்கு தேவையான ஊட்டச்சத்தை எடுத்துக் கொள்ள உதவுகிறது. மேலும் தாவரங்கள் எடுத்து கொள்ள தடையாக இருக்கும் தாதுக்களான பாஸ்பரஸ், இரும்பு மற்றும் மண்ணில் உள்ள பிற "நெருக்கமான இறுகிய" ஊட்டச்சத்துக்களைக் கரைத்து மண்ணில், ஒரு சக்தி வாய்ந்த இரசாயனத்தை வெளியிடுகிறது. குறிப்பாக தாவர ஊட்டச்சத்தில் இந்த பிரித்தெடுக்கும் முறை முக்கியமானது. மேலும் மைக்கோரைஸா அல்லாத தாவரங்கள் தங்கள் நலத்தை பராமரிக்க மண் வளத்தை உயர் அளவுகளில் எடுத்து கொள்கிறது. மைக்கோரைஸா பூஞ்சை மண்ணில் உள்ள சத்துக்களை எடுத்து, தாவரங்களுக்குக்கொடுத்து, மண்ணில் உள்ள சத்துக்களைத் தக்க வைத்துக் கொள்கிறது. மைக்கோரைஸா பூஞ்சை இல்லாத மண்ணில், மண்ணில் உள்ள சத்துக்களை எடுக்க முடியாமல் அந்த சத்துக்கள் வீணாகின்றன. மைக்கோரைஸா பூஞ்சை மற்ற என்ன வேலைகளை செய்கிறது? மைக்கோரைஸா பூஞ்சை பல்வேறு வகையான வேலைகளை செய்கின்றது. குறிப்பாக, தாவரங்களின் முளைப்பு மற்றும் வளர்ச்சியை மேம்படுத்துகிறது. பூஞ்சையின் விரிவான வலைப்பின்னல் அமைப்பு தண்ணீர் எடுத்துக்கொள்ளல், ஊட்டச்சத்தை எடுத்துக்கொள்ளல் மற்றும் தண்ணீர் சேமிப்பிலும் உதவுகிறது. பாசன வசதி இல்லாத நிலையில் மைக்கோரைஸா இல்லாத தாவரங்களுடன், மைக்கோரைஸா தாவரங்களை ஒப்பிடும்போது, வறட்சி அழுத்தத்தைத் தாங்கி வளர்கின்றன. மைக்கோரைஸா பூஞ்சை மண் கட்டமைப்பை மேம்படுத்துகிறது. மைக்கோரைஸா வலைப்பின்னல் அமைப்பு ஹ்யூமிக் கலவைகள் மற்றும் அங்ககப் பசைகள் உருவாக்கி மண்ணைப் பிணைக்கிறது. மேலும் மண்ணில் காற்று உட்புகும் திறனை அதிகரிக்கிறது. மண் புரைமை மற்றும் மண் கட்டமைப்பு, மண்ணில் காற்று உட்புகும் திறன், மண்ணில் நீர் உட்புகும் திறன், வேர் வளர்ச்சி மற்றும் வேர் பரவல் ஆகியவற்றின் உதவியுடன் தாவரங்களின் வளர்ச்சியை மேம்படுத்துகிறது. மணல் அல்லது இறுகிய மண்ணில், மைக்கோரைஸா பூஞ்சை, மண் அமைப்பை மேம்படுத்தி, தாவரங்களுக்கு தேவையான சத்துக்களை அளிப்பதில் முக்கியத்துவம் வகிக்கிறது. ஆதாரம்: http://www.icrisat.org/vasat/learning_resources/OrganicFAQs/organic_farming.htm |
முதல் பக்கம் | திட்டங்கள் | பயிர்ச்சிகள் | மற்றவை | புகைப்படங்கள் | தொடர்புக்கு| பொறுப்புத் துறப்பு © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016 |