organic farming
அங்கக வேளாண்மை :: உயிர் உரம் : கேள்வி பதில்

உயிர் உரம் 

மைக்கோரைஸா உட்புகுத்திக்கு அதிக செலவாகுமா?

மைக்கோரைஸா உட்புகுத்தி மலிவானதாக உள்ளது. பொதுவாக சிறிய தாவரங்களின் செலவு நாற்று ஒன்றுக்கு ஒரு பைசாவிலிருந்து சில சென்டுகளுக்கும் குறைவாகவே செலவாகிறது. பெரிய தாவரங்களுக்கு, வேர் உட்புகுத்தி அதிகமாக தேவைப்படுவதால் செலவும் அதிகமாகிறது.

அசோலா என்றால் என்ன? அசோலா என்பது நமக்கு எப்படி நன்மை தரக்கூடியதாக இருக்கிறது?

 அசோலா என்பது நீர்ப்பெரணி. கூட்டு வாழ்வு முறை மூலமாக நீல பச்சை பாசி உதவியுடன் வளிமண்டல நைட்ரஜனை மண்ணில் நிலைப்படுத்துகிறது. அசோலா மண் நலம் மற்றும் மண் வளத்தை அதிகரிக்கிறது. அசோலா களைகளின் வளர்ச்சியை கட்டுப்படுத்துகிறது. அசோலா இரசாயன நைட்ரஜன் உரங்கள் பயன்படுத்தபடுவதால் ஏற்படும் இழப்பைக் குறைக்கின்றது. அசோலா உயிர் உர தொழில்நுட்பம் எளிய, பொருளாதார செலவு குறைந்த மற்றும் சுற்றுப்புறச் சூழலுக்கு நன்மை அளிக்க கூடிய தொழில்நுட்பமாகும்.

நெல் வயலில் நடவுக்கு முன் அல்லது பின் வளர்க்கப்பட்ட அசோலா, 25 டன் அளவு உயிர் எடை உற்பத்தி மற்றும் 50 கிலோ தழைச்சத்து / எக்டர் அளிக்கின்றது. அசோலாவை பயிர்ப் பருவ காலங்களில் வளர்க்கும் போது 20-40 கிலோ / எக்டர் தழைச்சத்தை வழங்குகிறது. இது கோழி, வாத்து, மீன் மற்றும் கால்நடைகளுக்குத் தீவனமாக பயன்படுத்தப்படுகிறது.

ரைசோபியம் எந்தப் பயிருக்குப் பயன்படுத்தப்படுகிறது?

ரைசோபியம் பயறு வகை பயிர்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. இது பயறு வகை பயிர்களில் 50-100 கிலோ தழைச்சத்து / ஹெக்டேருக்கு நிலைப்படுத்துகிறது. வெவ்வேறு பயறு வகைப் பயிர்களுக்கு குறிப்பிட்ட ரைசோபிய வளர் ஊடகம் தேவைப்படுகிறது.

நாம் ஏன் அசோஸ்பைரில்லத்தை பயிர்களுக்கு இட வேண்டும்?

நெல், சிறு தானியங்கள், மக்காசோளம், சோளம், கோதுமை போன்ற தானியங்களுக்கு அசோஸ்பைரில்லம் பரிந்துரைக்கப்படுகிறது. இது 20-40 கிலோ தழைச்சத்து / ஹெக்டேருக்கு நிலைநிறுத்துகிறது.

தொடர்ச்சி.....


ஆதாரம்:

http://www.icrisat.org/vasat/learning_resources/OrganicFAQs/organic_farming.htm    
www.mycorrhizae.com
www.hortsorb.com
http://kendujhar.nic.in/
http://www.greenpeace.org

 
முதல் பக்கம் | திட்டங்கள் | பயிர்ச்சிகள் | மற்றவை | புகைப்படங்கள் | தொடர்புக்கு| பொறுப்புத் துறப்பு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016