organic farming
அங்கக வேளாண்மை :: அங்கக சான்றளிப்பு : கேள்வி பதில்

அங்கக சான்றளிப்பு 

பண்ணையின் ஒரு பகுதி மட்டுமே சான்றளிக்க சாத்தியமா?

ஆமாம். டாஸ்மேனியா கீழ் செயல்படும் அனைத்து சான்றளிப்பு குழுக்கள் பண்ணையின் ஒரு பகுதியை மட்டுமே சான்றளிக்க ஆதரிக்கும். எனினும், பத்து ஆண்டுகளுக்குள் பெற்ற பகுதி சான்றிதழ், அவர்களின் சொத்து முழுவதற்கும் பொருந்தும் என்று நம்புகின்றனர். பகுதி சான்றிதழ் என்பது ஒரு விவசாயி ஒரு பண்ணை முழுவதும் விவசாயம் செய்யாமல் ஒரு பகுதி நிலத்தில் அங்கக வேளாண்மை செய்து சான்றிதழ் பெறுவது என்று அர்த்தம்.

நான் அங்கக  மற்றும் பாராம்பரிய உணவு முறைகளை செயல்படுத்த முடியுமா?

ஆம். அங்கக சான்றிதழ்  பெற்ற  பல செயலாளர்கள்  அங்கக மற்றும் வழக்கமான  முறையில் தங்கள் பொருட்களை தயாரிக்கலாம்.  அங்கக பொருட்களை  பதப்படுத்துவதற்கு சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன. உதாரணமாக, ஒரு அறுவடை கூடத்தில், ஒரு முழுமையான சுத்திகரிப்பு நடந்து முடிந்த பிறகு,  அங்கக முறையில்  அடுத்த செயல்முறை மேற்கொள்ளப்பட வேண்டும். இது  வழக்கமாக ஒரு  தொழிலாளர்களின்  வார இறுதியான ஒரு வெள்ளிக்கிழமை சுத்தம் செய்த பிறகு,  திங்களன்று காலையில் இருந்து தொடங்க  வேண்டும்.

பதப்படுத்துபவர்கள், வழக்கமான பொருட்களுடன் வெவ்வேறு பொருட்கள்  குறுக்கு கலப்பு செய்யப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். பயிர் / பழத்தோட்ட சூழ்நிலையில், ஒரு பகுதி பொருட்கள் மட்டுமே  மாற்ற முடியும். பண்ணையில்  கால்நடைகள் இருக்கும் சமயத்தில், முழு பண்ணையையும் மாற்றுவது  மிகவும் கடினம் ஆகும். ஒரு நிறுவனம், அங்கக மற்றும் பாராம்பரிய தயாரிப்புப் பொருட்களை பதப்படுத்தலாம். ஆனால் அங்கக தர வசதியை பின்பற்றி பொருட்களை சுத்தப்படுத்த வேண்டும்.  இதை பற்றி மேலும் சந்தேகம் இருந்தால், அதை தெளிவுபடுத்தி கொள்ள உங்கள் சான்றளிப்பு குழுவிடம் பேசலாம்.

நான் ஒரு பண்ணையை வாங்க விரும்புகிறேன். அதில் அங்கக முறையில் விவசாயம் செய்ய  விரும்புகிறேன். அங்கக பண்ணையாக்க நான் என்ன செய்ய வேண்டும் மற்றும் அங்கக முறையில் பயிர் வளர்ப்பு  செய்ய தேவையான  சில தகவல்களை கொடுக்க முடியுமா?

பண்ணை அமைந்துள்ள இடம், காலநிலை மற்றும் மண் வகைகள்  ஆகியவற்றை பொறுத்து பண்ணையில் என்னென்ன வகையான பயிர்கள் பயிர் செய்யலாம் என்று  தீர்மானிக்க முடியும். உங்களின் விவசாய அனுபவம் / அறிவு மற்றும் உங்களுக்கு கிடைக்கும் நேரம், இவற்றை பொருத்து என்ன  வகையான  பயிர்கள் உங்களுக்கு மிகவும் பொருத்தமானதாக  இருக்கும் என்பதை நிர்ணயிக்க முடியும்.

தொடர்ச்சி.....


ஆதாரம்:

http://www.icrisat.org/vasat/learning_resources/OrganicFAQs/organic_farming.htm    
www.mycorrhizae.com
www.hortsorb.com
http://kendujhar.nic.in/
http://www.greenpeace.org

 
முதல் பக்கம் | திட்டங்கள் | பயிர்ச்சிகள் | மற்றவை | புகைப்படங்கள் | தொடர்புக்கு| பொறுப்புத் துறப்பு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016