organic farming
அங்கக வேளாண்மை :: அங்கக சான்றளிப்பு : கேள்வி பதில்

அங்கக சான்றளிப்பு 

நான், அங்கக  வேளாண்மை தொடங்க வேண்டும். எப்படி இது நான் ஏற்கனவே செய்து வரும் வழக்கமான நடைமுறை விவசாயத்தில் இருந்து வேறுபட்டதாக இருக்கும்?

வழக்கமான முறையில் செய்யப்படும் பயிர் நடவு மற்றும் அறுவடை முறைகளை, அங்கக பயிர்  உற்பத்தி மிகவும் ஒத்துள்ளது. பொதுவாக பயிர் ரகங்கள் ஒரே மாதிரியாக உள்ளன. மண்ணின் வளம், களைகள் மற்றும் மற்ற பூச்சிகள் இன்னும் தீவிர முறையில் நிர்வகிக்கப்பட வேண்டும். பயிர் சுழற்சி மற்றும் இயந்திர முறையில் பயிர் சாகுபடி செய்யும் நேரம் வெற்றிக்கு முக்கியமானதாக உள்ளன. கால்நடை ஒருங்கிணைப்பு, பயிர்களுக்கு தேவையான உரம் / மட்கு எரு அளிக்க உதவுகிறது.

அங்கக வேளாண்மை விரிவடைந்து வருகிறதா?

சுமார் 90,000 ஏக்கர் மேற்பட்ட சான்றளிக்கப்பட்ட நிலத்தில், ஒன்டாரியோவில் மட்டும் சுமார் 500 சான்றளிக்கப்பட்ட அங்கக வேளாண்மை பண்ணைகள், 2005 ஆம் ஆண்டில் இருந்தன. 1996-ம்-ஆண்டின் ஒப்பிடத்தக்க அளவை காட்டிலும் இரு மடங்கு அதிகம் ஆகும். வட அமெரிக்காவில் அங்கக உணவு விற்பனையின் வளர்ச்சி கடந்த 10 ஆண்டுகளில் வருடத்திற்கு 20% என தொடர்ந்து இருந்து வருகிறது.

அங்கக சான்றளிப்பு செயல்முறையில் என்ன செய்ய வேண்டும்?

நீங்கள் போதுமான ஆய்வு மேற்கொண்ட பிறகு, அங்கக சான்றிதழ் பெற வேண்டும் என்று முடிவு செய்தால் நீங்கள் ஒரு சான்றிதழ் குழுவிற்கு ஒரு விண்ணப்ப படிவத்தை சமர்ப்பித்து, பின் ஆரம்ப கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்பப் படிவத்துடன் வயலில் இரசாயன உரங்களின்பயன்பாடு, சாகுபடி முறைகள், உரங்கள் மற்றும் பூச்சி கட்டுபாட்டிற்கான இடுபொருட்கள் உட்பட பண்ணை மேலாண்மை வரலாறு பற்றிய ஒரு கேள்வித்தாள் தகவலை தர கோருகிறது.  ஆரம்ப 12 மாத காலம், "பொதுவாக முன் சான்றிதழ் காலம்" என குறிப்பிடப்படுகிறது. அடுத்த இரண்டு ஆண்டு காலம் "உள் மாற்று காலம்” என்று அழைக்கபடுகிறது.

அங்கக உற்பத்தி பொருளாதார ரீதியாக உள்ளதா?

அங்கக உற்பத்தியை  பொருளாதார ரீதியாக மாற்றம் செய்யும் போது தயாரிப்பாளர்கள், பல காரணிகளை கருத்தில் கொள்ள வேண்டும். பொதுவாக, முதல் சில ஆண்டுகளில், பயிரின் விளைச்சல் குறைந்து காணப்படும். உங்கள் பகுதிக்கு அங்கக  உற்பத்தி பொருத்தமாக இல்லை என்றால், இது  சில நிதி நெருக்கடிகளை உண்டாக்கும். ரசாயன உரங்களை  வாங்கும் செலவு குறையும். ஆனால்  அங்கக சான்றளிப்பு பெற்ற  இடுபொருட்கலான, தீவனம்,  அங்கக  உரங்கள் வாங்குதல் மற்றும்  அவற்றை  பிரித்து  எடுப்பதற்காண செலவு அதிகம்.

தொடர்ச்சி.....


ஆதாரம்:

http://www.icrisat.org/vasat/learning_resources/OrganicFAQs/organic_farming.htm    
www.mycorrhizae.com
www.hortsorb.com
http://kendujhar.nic.in/
http://www.greenpeace.org

 
முதல் பக்கம் | திட்டங்கள் | பயிர்ச்சிகள் | மற்றவை | புகைப்படங்கள் | தொடர்புக்கு| பொறுப்புத் துறப்பு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016