organic farming
அங்கக வேளாண்மை :: அங்கக சான்றளிப்பு : கேள்வி பதில்

அங்கக சான்றளிப்பு 

நான் அங்கக உற்பத்தியில் என்ன பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்த முடியும்?

1. அங்கக உற்பத்தியில் எந்த இரசாயன களைக்கொல்லிகளும் அனுமதிக்கப்படுவதில்லை.
2. ஒரு மிக சிறிய எண்ணிக்கையிலான இரசாயன பூசணக்கொல்லிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. நீங்கள் அவற்றை பயன்படுத்த சிறப்பு அனுமதி (சிலசமயம்) பெற வேண்டும்.
3. மிக சிறிய அளவிலான, எளிமையான பூச்சிக்கொல்லிகளை நீங்கள் பயன்படுத்த சிறப்பு அனுமதி பெற வேண்டும்.

நான் அங்கக உற்பத்தியில் ரசாயன உரங்களை பயன்படுத்த முடியுமா?

செயற்கை உரங்கள் அங்கக உற்பத்தியில் அனுமதிக்கப்படுவதில்லை. பயிர் மற்றும் புல் வளர்ப்புக்கு தேவையான மண் வளம் கீழ்க்கண்ட காரணிகளை அடிப்படையாகக் கொண்டது:

  • திட்டமிட்ட பயிர் சுழற்சி முறை
  • மேய்ச்சல் நில பரப்பு மற்றும் தீவனப்புல் பயன்பாடு அல்லது பசுந்தாள் உரம்
  • உரங்கள், மட்கு எரு மற்றும் சாண எரிவாயு குழம்பின் நிர்வகிக்கப்பட்ட பயன்பாடு
  • அங்கீகரிக்கப்பட்ட இணை இரசாயன பொருட்கள்
  • இறக்குமதி செய்யப்பட்ட அங்கக உரங்கலான அங்கக கோழி எருவின்  குறைந்த அளவு பயன்பாடு

அங்கக வேளாண்மையில், ரசாயன பூச்சிகொல்லிகளின் தெளிப்பு இல்லை, ரசாயன உரங்களின்  பயன்பாடு  இல்லை. அதாவது, பயிர்களை மட்டும் வளர்த்தல்  - சரியா ?

தவறு - ஒரு ஒருங்கிணைந்த உற்பத்தி அமைப்பை உருவாக்க அங்கக உற்பத்தி தேவைப்படுகிறது:

  • திட்டமிட்ட பயிர் சுழற்சி முறை
  • காற்றில் உள்ள நைட்ரஜனை மண்ணிற்குள் உட்புகுத்தும் வழிமுறை
  • உரங்கள், மட்கு எரு மற்றும் சாண எரிவாயு குழம்பின் நிர்வகிக்கப்பட்ட பயன்பாடு
  • கவனமாக தேர்வு செய்யப்பட்ட பயிர் மற்றும் புல் ரகங்கள்
  • இயந்திர களை கட்டுப்பாடு தொழில் நுட்பங்கள்

அங்கக வேளாண்மை என்றால் என்ன?

அங்கக வேளாண்மை என்பது அங்கீகரிக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய தரத்திற்கு உட்பட்ட, பண்ணை அமைப்பில் இருந்து உயர்தர உணவுகளை உற்பத்தி செய்வதாகும். பண்ணையில் இருந்து வெளிவரும் அங்கக உணவுப் பொருட்கள் அல்லது பதப்படுத்தப்படும் திடல், ஐரோப்பிய தர கட்டுப்பாட்டின் அடிப்படையில் சான்றளிக்கப்படுகிறது. எனவே, நுகர்வோருக்கு இந்தபொருட்களின் தரம் பற்றிய உத்திரவாதம் அளிக்கிறது.

தொடர்ச்சி.....


ஆதாரம்:

http://www.icrisat.org/vasat/learning_resources/OrganicFAQs/organic_farming.htm    
www.mycorrhizae.com
www.hortsorb.com
http://kendujhar.nic.in/
http://www.greenpeace.org

 
முதல் பக்கம் | திட்டங்கள் | பயிர்ச்சிகள் | மற்றவை | புகைப்படங்கள் | தொடர்புக்கு| பொறுப்புத் துறப்பு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016