organic farming
அங்கக வேளாண்மை :: மட்கு எரு : கேள்வி பதில்

மட்கு எரு

மண்ணில் இருந்து மட்கிய உரம் வேறுபடுகிறதா?

மட்கிய உரம், அங்ககப் பொருள்களை கொண்டுள்ளது.  அதில் உள்ள நுண்ணுயிரிகள் மற்றும் சத்துகள் பூபடுகைகள் மற்றும் காய்கறி தோட்டங்களுக்கு தேவையான உரங்களை உருமாற்றி தருகின்றன. மட்கிய உரம் ஒரு மதிப்புமிக்க மண் வள ஊக்கி.  இது அதிக அங்கக உட்பொருளைக் கொண்டிருக்கிறது. காலம் மற்றும் அதிக பயன்பாட்டினால் காணாமல் போன பல பண்புகளை மண்ணிற்கு திரும்பவும் கொண்டு  வர உதவுகிறது.

மட்கிய உரம், தாவர வளர்ச்சியை மேம்படுத்த கூடிய பல  நுண்ணூட்டச் சத்துகளைக்  கொண்டிருக்கிறது. இது ஒரு "மெதுவாக வெளியிடும்" உரமாக செயல்படுகிறது.  மேலும் மட்கிய உரம் மண்ணின் நீர் தக்க வைக்கும் திறனை அதிகரிக்கிறது. கோடை காலங்களில்  நீரை சேமித்து வைத்திருக்கவும்  உதவுகிறது.

மட்கிய உரத்தின்  நன்மைகள் என்ன?

நகர்புற நன்மைகள் மக்களின் நன்மைகள் உரம் பயன்படுத்துவதின் நன்மைகள்
  • உணவு மற்றும் திடகழிவுகளை மறுசுழற்சி செய்ய கால்கேரியன்களை ஊக்குவிக்கிறது.
  • பசுமை வீடுகளின் வாயுக்களைக் குறைக்கிறது.
  • நிலத்தின் வளத்தை அதிகரிப்பதன் மூலம் வாழ்க்கையை நீட்டிக்கிறது.
  • 2020-ல் 80/20- இலக்கை அடைய மற்றொரு வழி வகுக்கிறது.
  • குடும்பத்தில் உள்ள அனைவரையும் நன்மை பயக்கும் சூழ்நிலைக்கு  மாற்றி கொள்ள எளிதான மற்றும் வேடிக்கையான வழி.
  • உங்கள் வாராந்திர குப்பைகளை  கிட்டத் தட்ட பாதியாகக்  குறைக்கிறது.
  • நிலத்தில் புதைத்தலை விட மதிப்புள்ள இயற்கை வளத்தை மறுசுழற்சி செய்கிறது
  • உங்கள்
    தோட்டங்களுக்கு இலவச உரம் கொடுக்கிறது.
  • களிமண்ணை உடைக்க உதவுகிறது.
  • மண்ணிற்கு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைச் சேர்க்கிறது.
  • மண்ணில் நீரை சிறப்பாக நிறுத்தி வைக்க உதவுகிறது.
  • களைகளை நீக்குகிறது.
  • தோட்டங்கள் மற்றும் புல்வெளிகள் ரசாயனங்களை சார்ந்திருப்பதைக் குறைக்க உதவுகிறது.

தொடர்ச்சி.....


ஆதாரம்:

http://www.icrisat.org/vasat/learning_resources/OrganicFAQs/organic_farming.htm    
www.mycorrhizae.com
www.hortsorb.com
http://kendujhar.nic.in/
http://www.greenpeace.org

 
முதல் பக்கம் | திட்டங்கள் | பயிர்ச்சிகள் | மற்றவை | புகைப்படங்கள் | தொடர்புக்கு| பொறுப்புத் துறப்பு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016