அங்கக வேளாண்மை :: மட்கு எரு : கேள்வி பதில் |
||||||||||||||||||||
மட்கு எரு நான் எதை மட்க வைக்க முடியும் ? பண்ணை கழிவுகளான புற்கள், உதிர்ந்த இலைகள், விதையாவதற்கு முன் உள்ள களைகள், மரப் பழம், கொட்டைகள் மற்றும் நோய் இல்லாத தோட்டத்து செடிகள் போன்றவை சிறந்த உரம் தயாரிக்க பயன்படுகிறது. சமையலறை கழிவுகளான நறுக்கப்பட்ட பழம் மற்றும் காய்கறிகளின் தோல்கள், வடிகட்டிய டீத்தூள் மற்றும் காபித்தூள் இவற்றையும் உரமாக்கலாம். மரக்கழிவுகளான கிளைகள் மற்றும் தூரிகைகளை சிறிய துண்டுகளாக வெட்டியும், நீளமானவற்றை நறுக்கியும் அதே அளவில் பயன்படுத்தலாம். இறைச்சி, எலும்புகள், கிரீஸ், கொழுப்பு அல்லது கொழுப்பு உணவுகளான பாலாடைக்கட்டி, சாலட் டிரஸ்ஸிங் அல்லது எஞ்சியிருக்கும் சமையல் எண்ணெய் போன்றவை பூச்சிகளை ஈர்க்கும் அல்லது நாற்றப்பிரச்சினையை ஏற்படுத்தும் என்பதால் அவற்றை மட்குவதற்கு பயன் படுத்தகூடாது .
நான் எப்படி மட்கு உரம் தயார் செய்வது ? உரமாக்குதலுக்கு ஐந்து அடிப்படை விஷயங்கள் தேவை.
அங்கக பொருள்கள் "பசுமை" (உயர் நைட்ரஜன்) மற்றும் "பழுப்பு" (உயர் கார்பன்) என பிரிக்கப்பட்டுள்ளது. பச்சை பொருட்கள், பொதுவாக ஈரப்பதம் உள்ள பழங்கள் மற்றும் காய்கறி கழிவுகள், புதிய புற்களின் வெட்டுக்கள் அல்லது புதிய உதிர்ந்த இலைகள் போன்று இருக்கும். பழுப்பு பொருட்கள், உலர் பழுப்பு இலைகள் அல்லது காய்ந்த வைக்கோல் போன்று உலர வைக்கப்படுகின்றன. ஆதாரம்: http://www.icrisat.org/vasat/learning_resources/OrganicFAQs/organic_farming.htm |
||||||||||||||||||||
முதல் பக்கம் | திட்டங்கள் | பயிர்ச்சிகள் | மற்றவை | புகைப்படங்கள் | தொடர்புக்கு| பொறுப்புத் துறப்பு © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016 |