organic farming
அங்கக வேளாண்மை :: மட்கு எரு : கேள்வி பதில்

மட்கு எரு

தேவையான பொருட்களை உள்ளூரில் எளிதாக பெறமுடியுமா?

சுருள்பாசி வளர்ப்பதற்கு சோடியம் பைகார்பனேட் என்ற மூலப்பொருள் தேவைப்படுகிறது. இது விலங்குகளுக்கான ஊட்டச்சத்து மற்றும் பிற பகுதிகளில் பயன்படுத்தப்படுகிறது. கூடுதலாக, மரச் சாம்பலை இதற்குப் பதிலாகப் பயன்படுத்த  முடியும். விவசாயத்தில் பொதுவாகப் பயன்படுத்தப்படும், தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்துகளை சுருள் பாசி உள்ளடக்கியுள்ளது.

மக்களால், குறிப்பாக குழந்தைகளால் சுருள்பாசி ஏற்றுக் கொள்ளப்பட்டதா?

வழக்கமான அச்சத்திற்கு மாறாக, சுருள் பாசி (குறைந்த அளவுகளில் பரிந்துரைக்கப்படுகிறது) தேவைப்படுபவர்களால், எந்த பிரச்சனையும் இல்லாமல் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. உண்மையில், பொதுவாக இளம் குழந்தைகளால் விரும்பி உண்ணப்படுகிறது.

ஏன் இலைகள் மற்றும் பிற வீட்டு கழிவுகளை எரிக்க முடியாது?

இலைகள் மற்றும் பிற வீட்டு கழிவுகளை எரித்தால் காற்று மாசுபடும் மற்றும் கட்டுப்பாடற்ற தீப்பிடிப்பதற்கு வழிவகுக்கும். இலைகளை எரிக்கும் போது வெளிப்படும் புகை ஆஸ்துமா, எம்பைசிமா, நாட்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி, அல்லது ஒவ்வாமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மூச்சு விடுவதற்கு கடினமான பாதிப்பை ஏற்படுத்தும். பல மாவட்டங்களில் தற்போது இலை எரிப்பதற்கு தடை விதிக்கபட்டு உள்ளது.  சில சமூகங்கள் இலை எரிப்பதற்கு தடை அல்லது எப்போது எங்கே இலைகளை எரித்தாலும்  அவற்றை  தடை செய்கின்றன.

ஏன் வீட்டு குப்பை கழிவுகளை நிலத்தில் போடுவதில்லை?

இந்த பொருட்கள் ஒப்பீட்டளவில் சுத்தமான மற்றும் மக்கும் தன்மை உள்ளவை என்பதால், நிலத்தில் குப்பையைக் கொட்டுவது தேவையில்லாதது. வீட்டு குப்பை கழிவுகள் நிலத்தில் மட்கும் சமயத்தில் அவை மீத்தேன் வாயு மற்றும் அமிலத்தன்மை கலந்த கழிவுநீரை உருவாக்குகிறது. மீத்தேன் ஒரு நிறமற்ற, வெடிக்கும் பசுமை வாயு,  நிலத்தில் அங்கக பொருட்கள் மட்கும்  நேரத்தில் பாக்டீரியாவால் இது வெளியிடப்படுகிறது. மீத்தேன் நிலத்தில் கட்டுப்பாட்டில் இல்லாமல் இருந்தால் அது நிலத்தடி மற்றும் அங்கு அருகில் கட்டிடங்களை வெடிக்கச் செய்யும் சாத்தியம் கொண்டது. குப்பைக்கழிவுகள் அமிலத்தன்மை கொண்டதாக இருக்கும். மேலும் இது மற்ற கழிவு பொருட்களை, அதிக நச்சுத்தன்மை உடையதாக மாற்றும் இயல்பு கொண்டது.

மட்கு உரம் எவ்வாறு மண்ணை மேம்படுத்துகிறது?

மட்கு உரம்  பல வழிகளில்  மண்ணை  மேம்படுத்துகிறது. ஆனால், செயற்கை உரங்களால்  அதைச் செய்ய முடியாது. முதலில், அது அங்ககப்பொருட்களை மண்ணில்  சேர்த்து, பின்னர் மண்ணுடன், நீர்  ஊற்றுவதற்கு வழி செய்கிறது. மணற்பாங்கான நிலங்களில் மட்கு உரம் பஞ்சு போல செயல்பட்டு , மண்ணில் நீரைத்தக்க வைப்பதில் உதவுகிறது, இல்லையெனில் செடிகளின் வேர்களை தாண்டி (இந்த வழியில், அது வறட்சிக்கு எதிராகத் தாவரங்களைப் பாதுகாக்கிறது) நீர் சென்று விடும். களிமண் மண் நிலத்தில், மட்கு உரம், சிறிய துளைகள் மற்றும் சிறிய பாதைகளை அமைத்து, மண்ணுக்கு இளகுத்தன்மையை   சேர்க்கிறது. இதனால்  நீர் தேங்கி நிற்பதை தடுக்கிறது  மற்றும் மண்  ஒரு செங்கல் பொருள் போல காய்ந்து விடுவதையும்  தடுக்கிறது. பரந்த அளவிலான நன்மை செய்யும் நுண்ணுயிரிகளை (பாக்டீரியா, பூஞ்சை, முதலியன) மட்கு  உரம், மண்ணிற்கு அளிக்கிறது மற்றும் நுண்ணுயிர்கள் வாழ்வதற்கான வாழ்விடத்தையும் தருகிறது. இந்த நுண்ணுயிரிகள், மண்ணின்  தாது பகுதியிலிருந்து சத்துக்களை எடுத்து, இறுதியில் தாவரங்களுக்கு சத்துக்களை அனுப்புகிறது.


ஆதாரம்:

http://www.icrisat.org/vasat/learning_resources/OrganicFAQs/organic_farming.htm    
www.mycorrhizae.com
www.hortsorb.com
http://kendujhar.nic.in/
http://www.greenpeace.org

 
முதல் பக்கம் | திட்டங்கள் | பயிர்ச்சிகள் | மற்றவை | புகைப்படங்கள் | தொடர்புக்கு| பொறுப்புத் துறப்பு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016