அங்கக வேளாண்மை :: மட்கு எரு : கேள்வி பதில் |
மட்கு எரு மட்கு எரு உடன் சூப்பர் பாஸ்பேட் ஏன் சேர்க்க வேண்டும்? அங்ககக் கழிவுகள் மட்கும் பொழுது அதிக வெப்பம் உண்டாகுதல் மற்றும் உலர்தல் காரணமாக அங்ககக் கழிவுகளில் உள்ள தழைச்சத்து(நைட்ரஜன்) ஆவியாதல் முறையின் மூலம் இழக்கப்படுகிறது. சூப்பர் பாஸ்பேட் கூடுதலாக சேர்க்கும் பொழுது இந்த நைட்ரஜன் இழப்பு குறைகிறது. மேலும் இது உரத்தில் பாஸ்பேட் அளவை அதிகரிக்கும். மாட்டு பேட் குழி என்றால் என்ன? அதை எவ்வாறு தயாரிப்பது? இது ஒரு அங்கக முறைத் தயாரிப்பு ஆகும். மாட்டு சாணம், முட்டை ஓடு பொடி, பசால்ட் பாறை மட்டும் உயிராற்றல் வழிமுறைகளை ஒரு செங்கல் கொண்டு பயன்படுத்திக் கட்டப்பட்ட குழிகளில் தயார் செய்ய வேண்டும். எந்தப் பயறுவகைத் தாவரங்கள், பசுந்தாள் உரங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன? பட்டாணி, கிளைரிசிடியா மற்றும் தக்கைப்பூண்டு போன்ற பயிர்கள் பசுந்தாள் உரமாகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்தத் தாவரங்கள் மென்மையாக இருக்கும் பொழுது (அ) பூக்கள் வரத்தொடங்கும் முன் மடக்கி உழ வேண்டும். சொட்டு நீர் அமைப்பின் மூலம் திரவ உரமான பஞ்சகவ்யாவை பயிர்களுக்கு அளிக்க முடியுமா? ஆம். பெரும்பான்மையான விவசாயிகள் ஏற்கனவே சொட்டு நீர் அமைப்பின் மூலம் அங்கக திரவ உரங்களை உபயோகப்படுத்தி வருகின்றனர். மண்புழு உரம் தயாரிப்பில், மாட்டு சாணத்திற்கு பதிலாகத் தென்னை நார்க்கழிவுகளைப் பயன்படுத்தலாம். தென்னை நார்க்கழிவுகளைத் தனியாகச் சேர்க்கலாம். ஆனால் மாட்டு சாணம் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், மண்புழுக்களுக்குத் தேவையான நுண்ணுயிர் ஆற்றலை அளிப்பதால் இது அவசியம் தேவைப்படுகிறது. மண்புழு உரம் தயாரிக்க மாட்டு சாணத்திற்குப் பதிலாக தென்னை நார்க் கழிவு பயன்படுத்தலாமா? தென்னை நார் தனியாக சேர்க்கப்படுகின்றது. ஆனால், மிக முக்கியமான நுண்ணுயிர்களை அதிகப்படுத்த மாட்டு சாணம் மிக அவசியம் தேவைப் படுகின்றது. மேலும் மண்புழுக்களுக்கு தேவையான, நுண்ணுயிர் ஆற்றல் தேவைகளை பூர்த்தி செய்யவும் மாட்டு சாணம் தேவைப் படுகின்றது. ஆதாரம்: http://www.icrisat.org/vasat/learning_resources/OrganicFAQs/organic_farming.htm |
முதல் பக்கம் | திட்டங்கள் | பயிர்ச்சிகள் | மற்றவை | புகைப்படங்கள் | தொடர்புக்கு| பொறுப்புத் துறப்பு © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016 |