organic farming
அங்கக வேளாண்மை :: மட்கு எரு : கேள்வி பதில்

மட்கு எரு

காய்கறிப் பயிர்களுக்குத் தெளிக்க மஞ்சள் பொடி கரைசல் தயாரிப்பது எப்படி?

1 கிலோ மஞ்சள் கிழங்கை எடுத்து 10 லிட்டர் மாட்டு கோமியத்தின் ஓர் இரவு முழுவதும்  ஊற வைத்திருக்க வேண்டும். பின்னர் அடுத்த நாள் இந்தக்கிழங்கை அரைத்து 30 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். மீன் குணாபஜாலம் ஒரு அங்கக ஊட்டச்சத்து இதைப்பயிர்களுக்குத் தெளிப்பதன் மூலம் பச்சையம் அதிகரிக்கும். 1 கிலோ மீன் கழிவு(அழகிய மீன்), 1 கிலோ நெய் இரண்டையும் ஒரு பிளாஸ்டிக் பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு, கலந்து கொள்ள வேண்டும். இதே நிலையில் 25 நாட்கள் வைத்திருந்து பின் 100 மிலி கரைசலை 10 லிட்டர் நீரில் கலந்து பின் தெளிக்க வேண்டும்.

மேலும் தொடர்புக்கு: Dr. நம்மாழ்வார், நெ.17/9, 5 வது குறுக்கு, _னிவாஸ் நகர், திருநாய் கோயில், திருச்சி -620005.

மீன் குணாபஜாலம் என்றால்  என்ன? அது எப்படி தயார் செய்யப்படுகின்றது?

மீன் குணாபஜாலம் ஒரு அங்கக ஊட்டச்சத்து இதைப்பயிர்களுக்குத் தெளிப்பதன் மூலம் பச்சையம் அதிகரிக்கும். 1 கிலோ மீன் கழிவு(அழகிய மீன்), 1 கிலோ நெய் இரண்டையும் ஒரு பிளாஸ்டிக் பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு, கலந்து கொள்ள வேண்டும். இதே நிலையில் 25 நாட்கள் வைத்திருந்து பின் 100 மிலி கரைசலை 10 லிட்டர் நீரில் கலந்து பின் தெளிக்க வேண்டும்.

மேலும் தொடர்புக்கு: Dr. நம்மாழ்வார், நெ.17/9, 5 வது குறுக்கு, _னிவாஸ் நகர், திருஅன்னைகோயில், திருச்சி -620005.

உயிர் நண்பன் முறைகள் மூலம் கறிவேப்பிலையைத் தாக்கும். இலைச்சுருக்கம் மற்றும் வெள்ளைப்பகுதியைக் குணப்படுத்த முடியுமா?

கோடை காலங்களில், வேம்பு எண்ணெய், மண்புழு கழிவு மற்றும் மாட்டு கோமியத்தை ஒன்றாகக் கலந்து வாரம் ஒரு முறை இந்த கறிவேப்பிலை மரத்தின் மேல் தெளித்தால் நல்லபலன்கிடைக்கும்.

பயிரின் வளர்ச்சியை அதிகரிக்க, மண்புழு கழிவைத் தவிர, வேறு ஏதேனும் அங்கக ஹார்மோன்கள் கொண்டு தயாரிக்கப்படும் முறைகள் உள்ளனவா?

தேங்காய்ப்பால் மற்றும் மோர் இரண்டையும்(5 மி.லி.) ஒரு மட்பானையை எடுத்துக்கொண்டு, அதைப் பத்து நாட்கள் மண்ணில் புதைத்து வைத்து, அவற்றை நொதிக்க விட வேண்டும். பின்னர் அதை எடுத்து வடிகட்டி 1:10 என்ற விகிதத்தில் நீர்த்து பயிர்களின் மேல் தெளிக்கலாம்.

சுருள் பாசி வளர்ப்பு பற்றிய பயிற்சியை சென்னைக்கு அருகில் எங்கு சென்று பயிலலாம்?

தொடர்பு: ஆஃபர், நல்லாயன் நிலையான மேம்பாட்டிற்கான ஆராய்ச்சி நிறுவனம், நாவலூர் கிராமம், காஞ்சிபுரம் மாவட்டம், தமிழ்நாடு, இ-மெயில்: oferreeth.net, தொலைபேசி: 044-28193063(அலுவலகம்).

சமையலறைக்கழிவுகளை வெகுவாகப் பயன்படுத்துவது பற்றிய தகவல்களை நான் எங்கே பெற முடியும்?

தொடர்புக்கு: Mr.G. வாசுதேவ், செயலாளர், விவேகானந்த கேந்திரா – தேசிய வள மேம்பாட்டுத்திட்டம், கன்னியாகுமரி, தமிழ்நாடு-629 702.
இ-மெயில்: ngc_vknardep@sancharnet.in. தொலைபேசி: 04652-246296.

தொடர்ச்சி.....


ஆதாரம்:

http://www.icrisat.org/vasat/learning_resources/OrganicFAQs/organic_farming.htm    
www.mycorrhizae.com
www.hortsorb.com
http://kendujhar.nic.in/
http://www.greenpeace.org

 
முதல் பக்கம் | திட்டங்கள் | பயிர்ச்சிகள் | மற்றவை | புகைப்படங்கள் | தொடர்புக்கு| பொறுப்புத் துறப்பு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016