organic farming
அங்கக வேளாண்மை :: மட்கு எரு : கேள்வி பதில்

மட்கு எரு

வராக குணாபஜாலம் என்றால் என்ன? எதற்காக இது பயன்படுகிறது? எந்த இடத்தில் நான் இதன் பயன்கள் பற்றிய பயிற்சியைப்பெற முடியும்?

பன்றியின் எலும்பு மற்றும் சதைகளிலிருந்து இது தயாரிக்கப்படுகிறது. 5 கிலோ பன்றியின் சதை மற்றும் எலும்புகள், 1 கிலோ உளுந்து மற்றும் எள் இரண்டையும் 2 லிட்டர் நல்லெண்ணையில் வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் 2 கிலோ வெல்லம் சேர்த்து, மாட்டு கோமியம் அல்லது நீரில் ஊறவைத்து, மண்ணில் 30 நாட்கள் வரை புதைத்து வைத்திருக்க வேண்டும். இது பூக்கள் அதிகம் படிக்க மற்றும் பழங்கள் உருவாக உதவி புரிகிறது. இந்தக் கரைசலைக் கலந்து இவைகளின் மேல் தெளிக்கலாம் அல்லது நீர்ப்பாசனம் வழியே அளிக்கலாம். தொடர்புக்கு: ராசி அங்ககப் பண்ணை, தொலைபேசி: 98655-82142, 04565-284937.

தென்னை நார்க் கழிவிலிருந்து உரம் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?

பித்பிளஸ் இது ஒரு பயனுள்ள பூஞ்சை. இதைத் தென்னை நார்க்கழிவுகளில் சேர்த்து உரம் தயாரிக்கப்படுகிறது.

இந்தியாவில் சுருள்பாசி எங்கே உற்பத்தி செய்யப்படுகிறது?

சுருள்பாசி இந்தியாவில் தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம் மற்றும் ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட பெரிய மற்றும் சிறிய நிறுவனங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது.

பயறு வகைப் பயிர்கள் மற்ற பயிர்களின் சாகுபடிக்கு உதவி செய்யுமா?

பயறு வகைப் பயிர்கள், வேர் முடிச்சுகளில் பாக்டீரியா இணைந்து காற்றிலுள்ள தழைச்சத்தை மண்ணில் நிலை நிறுத்தும். இங்கு அதிகமாக உள்ள நைட்ரஜன் தொடர்ந்து பயிரிடப்படும் பயிரின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

உரம் எப்பொழுது  தயாராகும்?

பொருள் ஓரளவு தளர்வாக மற்றும் நொறுங்கும் நிலைக்கு மாறி அடர் பழுப்பு நிறத்தை அடையும் பொழுது உரம் தயாரிக்கலாம். இது, கருப்பு நிறம், குருணை, லேசான எடை மற்றும் மட்கிய பொருளாக இருக்கும். மண்புழுக்களை உரத்திலிருந்து பிரிக்க, 2-3 நாட்களுக்கு முன்னரே படுக்கைகளில் நீர் தெளிப்பதைத் தவிர்க்க வேண்டும். இதனால்  80 சதவீத புழுக்கள் படுக்கையின் அடிப்பகுதிக்கு சென்று விடும். மீதமுள்ள புழுக்கள் கையினால் அகற்றப்பட்டு, அடுத்த படுக்கைக்கு மாற்றம் செய்யப்படும். இந்த மண்புழு உரம் தயாராக உள்ளது. மண் வாசனை போன்ற மணம் வீசும். ஏதாவது கெட்ட நாற்றம் வீசினால் நொதித்தல் இந்த நிலைக்கு வரவில்லை என்றும் பாக்டீரியா சார்ந்த செயல்முறைகள் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.

அங்கக முறையில் மகசூல் குறைவாக இருக்குமா?

பல்வேறு பயிர்களின் 154 பருவ காலங்களின் விவரப் பட்டியலைப் பொறுத்து, 95 சதவிகிதம் அங்ககப்பயிர்கள் பாரம்பர்ய முறையில் அதிக இடுபொருட்களைக் கொண்டு வளர்க்கப்படுகின்றன. விவசாயிகள் பாரம்பர்ய முறையிலிருந்து அங்கக முறைக்கு மாறும் முதல் மூன்று வருடங்களில் குறைந்த மகசூலைப் பெறுவர். மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் மீண்டும் புத்துயிர் பெற்று, ஊட்டச்சத்துகளை ஒரு இடத்தில் மாற்றி அமைக்கும் காலகட்டத்தில் திரும்ப பழைய மகசூலை அடைய முடியும்.

தொடர்ச்சி.....


ஆதாரம்:

http://www.icrisat.org/vasat/learning_resources/OrganicFAQs/organic_farming.htm    
www.mycorrhizae.com
www.hortsorb.com
http://kendujhar.nic.in/
http://www.greenpeace.org

 
முதல் பக்கம் | திட்டங்கள் | பயிர்ச்சிகள் | மற்றவை | புகைப்படங்கள் | தொடர்புக்கு| பொறுப்புத் துறப்பு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016