organic farming
அங்கக வேளாண்மை :: மட்கு எரு : கேள்வி பதில்

மட்கு எரு

அங்கக வேளாண் முறையில் வரும் உணவுப்பொருட்கள் பாதுகாப்பானதா?

ஆம். அங்கக உணவுப்பொருட்கள் இதர உணவுப்பொருட்களை விட சிறந்ததாகும். அங்கக வேளாண்மை முறையில் உருவாகிய ஏனைய உணவுப்பொருட்களை விட  மிகக்குறைந்த அளவே பூச்சிக்கொல்லி எச்சங்களைக் கொண்டுள்ளது. அங்கக வேளாண்மை முறையில் அதிக அளவு பண்ணை சார்ந்த உரங்களை அப்படியே பயன்படுத்துவதால் ஈ கோள பாக்டீரியா மாசு ஏற்படும் என்ற ஒரு தவறான கருத்து நிலவி வருகின்றது. அங்கக வேளாண் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் இதைத்தவிர்க்க உரங்களை அப்படியே இடாமல் போதிய அளவு மக்கிய பின்பு அல்லது குறைந்த பட்சம் 90 நாட்கள் அறுவடைக்குப் பயன்படுத்தப்பட வேண்டும் என கண்டிப்பான வழிமுறைகளை அமைத்திருக்கின்றது.

அங்கக வேளாண் உணவுப்பொருட்கள் பாரம்பரிய உணவை விட சத்தானதா?

இதைப்பற்றிய உறுதியான ஆய்வுகள் இது வரை செய்வதற்கு ஒரு திரளான ஒப்பீட்டுக்காரணிகள் கிடைக்கப் பெறவில்லை. இதற்கான ஒப்பீட்டுக்காரணிகளான பயிர் வகை, அறுவடை நேரம், அறுவடைக்குப்பின் கையாளுதல் மற்றும் மண் வகை காலநிலைகள் கூட பொருட்களின் ஊட்டச்சத்து தரத்தில் விளைவுகளை ஏற்படுத்தும்.  எனினும் 2002 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் அங்கக வேளாண் உணவுப்பொருட்கள் வழக்கமாக உற்பத்தி செய்யப்படும் உணவுப்பொருட்களை விட பூச்சிக்கொல்லி எச்சங்களை உணவிலேயே கொண்டிருந்தன என்று குறிக்கிறது.

மக்கிய உரம் என்றால் என்ன?

உரமாக்குதல் என்பது ஒரு இயற்கையான செயல்பாடாகும். இதனைக் கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் நடத்திய போது இந்த செயல்பாடு உணவு மற்றும் தோட்டக்கழிவுகள் போன்ற மக்கும் பொருட்களை உரமாக மாற்றியமைத்து இந்த செயல்பாட்டின் பொழுது பாக்டீரியா மற்றும் பூஞ்சை உட்பட பல்வேறு நுண்ணுயிரிகள் கரிமப்பொருட்களை உரமாக்க ஏற்றவாறு மாற்றுகிறது.

எதற்காக உரமாக்குதல் செய்யப்பட வேண்டும்?

கரிம கழிவுப்பொருட்கள் தீங்கு விளைவிப்பவையாக இல்லாவிட்டாலும் அவை குப்பைக் கிடங்குகளிலுள்ள கழிவுகளில் பெரும்பான்மையாக இருக்கின்றன. அவ்வாறு கழிவுப்பொருட்கள் குப்பைக்கிடங்குகளில் பல நாட்களுக்கு இருக்கும் பொழுது பல தீங்கு விளைவிக்கும் வாயுக்கள் வெளியேறுகின்றன. அதனுடன் நீர்க்கழிவுகளின் வழியாக செல்லும் பொழுது, நச்சு திரவமாகக் கீழே இறங்குகிறது.

தொடர்ச்சி.....


ஆதாரம்:

http://www.icrisat.org/vasat/learning_resources/OrganicFAQs/organic_farming.htm    
www.mycorrhizae.com
www.hortsorb.com
http://kendujhar.nic.in/
http://www.greenpeace.org

 
முதல் பக்கம் | திட்டங்கள் | பயிர்ச்சிகள் | மற்றவை | புகைப்படங்கள் | தொடர்புக்கு| பொறுப்புத் துறப்பு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016