அங்கக வேளாண்மை :: மட்கு எரு : கேள்வி பதில் |
மட்கு எரு உரமாக்குதலினால் ஏற்படும் நன்மைகள்? உரமாக்குதல் திடக்கழிவு மேலாண்மைத் திட்டங்களில் ஒரு முக்கியப்பங்கை வகிக்கிறது. இதனால் நிலத்திற்கு செல்லும் கழிவுகளின் அளவு பெருமளவு குறைகின்றது. இதனுடன் உரமாக்குதல் வளங்களைப் பாதுகாக்கின்றது. மாசுபாட்டைக் குறைக்கின்றது. நில மற்றும் கழிவு அகற்றல் செலவுகளைக் குறைக்கின்றது மற்றும் ஆரோக்கியமான மண்ணை உருவாக்குகின்றது. எந்தப்பொருட்கள் உரமாக்குதலுக்கு ஏற்றவையாக இருக்கும்? ஏற்ற பொருட்கள்: பழங்கள், காய்கறிகள், வேகவைத்த பொருட்கள், அரிசி மற்றும் இதர தானியங்கள், உலர்ந்த சோளத்தண்டுகள், வேர்க்கடலை ஓடுகள் காப்பித்தூள் வடிகட்டியது. டீ இலை, முட்டை கூடுகள், காகித துண்டுகள், முட்டை அட்டைப்பெட்டிகள், கழிவறைக்காகிதக் கழிவுகள், தானிய பெட்டிகள், உலர்ந்த இலைகள், புல்கள், கிளைகள், சிறு கிளைகள், மரத்தூள், நோயற்ற தாவரங்கள் போன்றவை ஏற்ற பொருட்களாகும். ஏற்பில்லாத பொருட்கள்: அனைத்து இறைச்சி மற்றும் மீன் பொருட்கள், எலும்புகள், கொழுப்பு மற்றும் எண்ணெய்ப்பொருட்கள், பால் பொருட்கள் முதிர்ந்த களைகள், நாய் மற்றும் பூனைக்கழிவுகள், மக்கும் தன்மையற்ற பூச்சிக்கொல்லிகள் தெளிக்கப்பட்ட தாவரங்கள் போன்றவை உரமாக்குதலுக்கு ஏற்ற பொருட்கள் அல்ல. உரமாக்குதலில் பழுப்பு மற்றும் பச்சைப்பொருட்கள் என்றால் என்ன? உரக்குவியலில் செயல்பட கார்பன் மற்றும் நைட்ரஜன் இரண்டும் தேவைப்படுகின்றது. பழுப்பு பொருட்களான உலர்ந்த இலைகள், உலர்புல் மற்றும் காகித பொருட்கள் போன்றவை கார்பனை வழங்குகிறது. பச்சைப்பொருட்களான பழங்கள் மற்றும் காய்கறிகள் காப்பி மற்றும் தேயிலைப்பொருட்கள் மற்றும் வெட்டப்பட்ட பொருட்கள் போன்றவை நைட்ரஜனை வழங்குகிறது. உரமாக்குதல் களத்திற்கு சிறந்த இடம் என்ன? உரமாக்குதல் களம் நன்றாக சூரிய ஒளி படும்படியான, விரைவில் நீர் வடியக்கூடிய இடத்தில் அமைக்கப்பட வேண்டும். ஆதாரம்: http://www.icrisat.org/vasat/learning_resources/OrganicFAQs/organic_farming.htm |
முதல் பக்கம் | திட்டங்கள் | பயிர்ச்சிகள் | மற்றவை | புகைப்படங்கள் | தொடர்புக்கு| பொறுப்புத் துறப்பு © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016 |