அங்கக வேளாண்மை :: மட்கு எரு : கேள்வி பதில் |
மட்கு எரு உரக்குவியலில் துர்நாற்றம் வரும் பொழுது என்ன செய்ய வேண்டும்? உரக்குவியலுக்குள் போதுமான காற்று செல்லாமல் இருப்பதாலும் நீர் அதிகமாக இருப்பதாலும் துர்நாற்றம் வெளியேறுகின்றது. இதை சரிசெய்ய உரக்குவியலில் பழுப்பு பொருட்களை சேர்த்து அதனுடன் செழிப்பான தோட்ட மண்ணையும் சேர்த்து பிறகு உரக்குவியலுக்கு காற்றோட்டம் இருக்கும் படி செய்ய வேண்டும். பின்னர் மேல் அடுக்கில் பழுப்பு பொருட்களை இட வேண்டும். எவ்வாறு உரக்குவியலை பூச்சிகளிடமிருந்து காப்பது? வெளியில் உருவாக்கப்பட்ட உரக்குவியல் பூச்சிகள் வருவதைத்தடுக்க உணவுக்கழிவுகளைக் குவியலாக போட்ட பின் அதன் மேல் சற்ற தோட்ட மண்ணை வைத்து மூடி விட வேண்டும். கழிவுகளைப்போட்டு வைக்க பூச்சி எதிர்ப்புத்தன்மை கொண்ட குப்பைத்தொட்டி சிறிய காற்றுத்துளைகள் கொண்டவையாக வாங்கிப் பயன்படுத்தலாம். உரமாக்குதலில் இறுதிப்பொருட்களை எவ்வாறு உலர வைக்க வேண்டும்? உரத்தை நிழலின் அடியில் காய வைப்பது சிறந்த்தாக்க் காணப்படுகின்றது. ஏனெனில், உரம் முழுவதுமாக காய வைப்பு குறைவாகவே உள்ளது. முழுவதுமாக்க்காய வைக்கப்பட்ட உரங்கள் சிதைவதற்கு வாய்ப்புகள் இல்லை. இந்த உரமாக்குதல் செயல்பாடு எவ்வளவு நாட்கள் நடைபெறும்? சரியான நிலைமைகளை நிர்வகிப்பதன் மூலம் உரமாக்குதல் 1 மாத்த்திலிருந்து 2 வருடங்கள் வரை நடைபெறும். உரக்குவியலை சரியான முறையில் சீரான இடைவெளியில் கிளறி விடுவதன் மூலம் உரமாக்குதல் செயல்பாடானது ஓரிரு மாதங்களில் முடிவடையும். உரம் விரைவில் உருவாக்குவது அவசியம் இல்லை என்றாலும், அவரவருடைய தேவைகளைப் பொறுத்து நன்கு கிளறி விட்டு உரம் ஆகுவதை சீர் படுத்தலாம். ஆதாரம்: http://www.icrisat.org/vasat/learning_resources/OrganicFAQs/organic_farming.htm |
முதல் பக்கம் | திட்டங்கள் | பயிர்ச்சிகள் | மற்றவை | புகைப்படங்கள் | தொடர்புக்கு| பொறுப்புத் துறப்பு © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016 |