organic farming
அங்கக வேளாண்மை :: கேள்வி பதில்

அங்கக  வேளாண்மை  

அங்கக  வேளாண்மை  என்றால் என்ன ?

அங்கக வேளாண்மையில், பெருமளவு உபயோகிக்கபடும் செயற்கை உரங்கள், பூச்சி கொல்லிகள், ஹார்மோன்கள் மற்றும் தீவன சேர்க்கைகள் போன்ற செயற்கை இடுபொருட்களை தவிர்த்து, பயிர் சுழற்சி, பயிர் கழிவுகள், கால்நடை எருக்கள், பண்ணைக்கு வெளியே கிடைக்கும் அங்கக கழிவுகள், கனிம தா மிக்க பாறை சேர்க்கைகள் ,உயிரியல் அமைப்பு சார்ந்த பயிர் பாதுகாப்பு மற்றும் ஊட்டசத்து பெயர்ச்சி ஆகியவற்றை உள்ளடக்கி செய்வதே அங்கக விவசாயம் ஆகும்.

அங்கக வேளாண்மை மேற்கொள்ள பயிற்சி அவசியம் தேவைபடுகிறதா?

மக்கள்தொகை அதிகரிப்பின் காரணத்தால், விவசாய உற்பத்தியை நிலைப்படுத்துவதோடு, ஒரு நிலையான முறையில் உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். பூச்சிக்கொல்லிகள் மற்றும் உரங்கள் போன்ற விவசாய ரசாயனப் பொருட்களை ஒவ்வொரு ஆண்டும் அதிகமாகப் பயன்படுத்துவதால் மண்ணின் சுகாதாரம் பாதிப்படையும். மேலும் பயிர் மகசூல் மற்றும் பொருட்களின் தரம் குறைய வழிவகுக்கும். எனவே வாழ்க்கை மற்றும் சொத்துக்களைப் பராமரிக்க இயற்கை சமநிலை பின்பற்றப்பட வேண்டும். மேலும் விவசாய ரசாயனப்பொருட்களை சிறப்பாகப் பயன்படுத்துதல் மற்றும் இயற்கையான பண்ணை முறைகளை அதிகமாகப் பயன்படுத்துதல் ஒரு வெளிப்படையான தீர்வு  ஆகும்.

அங்கக வேளாண்மையின் பயன்கள் என்ன?

  • மாசு அளவைக் குறைத்து சுற்று சூழல் சுகாதாரத்தைப் பராமரிக்க உதவுகிறது.
  • உணவுப்பொருட்களில் உள்ள கலப்படத்தைக் குறைத்து, மனித மற்றும் கால்நடைகளின் சுகாதாரத்தைப் பாதுகாக்கிறது.
  • உற்பத்தி செலவைக் குறைத்து, மண்வளத்தையும் பாதுகாக்கிறது.
    குறைந்த கால தேவைகளுக்கான இயற்கை வளங்களை போதுமான அளவில் பயன்படுத்த அனுமதித்து, பின் மீதமுள்ளவற்றை வருங்கலா சந்ததியினருக்காக சேமித்து வைக்க உதவுகிறது.
  • அங்கக வேளாண்மை, கால்நடை மற்றும் இயந்திர ஆற்றலை சேமிப்பதோடு, பயிர் அழிவையும் குறைக்கிறது .
  • மண்ணின் இயற்பியல் பண்புகளான , மண் குருணையாக்கம், நல்ல மண் நயம் , நல்ல காற்றோட்ட வசதி , வேர் உட்புகு திறன் மற்றும் நீரை தக்க வைக்கும் திறன் ஆகியவற்றை மேம்படுத்துகிறது.
  • மண் ஊட்டசத்துகளை வழங்கல் மற்றும் தக்க வைத்தல், சாதகமான ரசாயன எதிர்வினைகளை ஊக்குவித்தல் போன்ற மண்ணின் வேதியியல் பண்புகளை மேம்படுத்துகிறது .

ஆதாரம்:

http://www.icrisat.org/vasat/learning_resources/OrganicFAQs/organic_farming.htm    
www.mycorrhizae.com
www.hortsorb.com
http://kendujhar.nic.in/
http://www.greenpeace.org

 
முதல் பக்கம் | திட்டங்கள் | பயிர்ச்சிகள் | மற்றவை | புகைப்படங்கள் | தொடர்புக்கு| பொறுப்புத் துறப்பு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016