அங்கக வேளாண்மை :: மற்ற கேள்விகள் : கேள்வி பதில் |
மற்ற கேள்விகள் தாவர அல்லது உயிர்ப் பூச்சிக் கொல்லிகள் என்றால் என்ன? உயிர் பூச்சிக்கொல்லி என்பது, விலங்குகள், தாவரங்கள், பாக்டீரியா மற்றும் கனிமங்கள் போன்ற இயற்கை பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. இந்தியாவில் வேப்பங்கொட்டை சாறு, விதைகள் மற்றும் இலைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட வேம்பு பொருட்கள், மலிவாகவும் மற்றும் பயனுள்ள பொருட்களாகவும் இருக்கின்றன. அங்கக வேளாண்மையிலிருந்து, எனக்கு என்ன கிடைக்கும்? முதலில் உணவு சத்தானதாகவும் மற்றும் பாதுகாப்பானதாகவும் இருக்கும். அங்கக பொருட்களில், அதிக கனிமங்கள், குறைவான நீர் மற்றும் குறைவான செயற்கை இரசாயனங்கள் உள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. பொதுவாக இதன் சுவை இயற்கையாக தான் உள்ளது. அங்கக காய்கறிகள் பொதுவாக வைட்டமின் சி, புரதம் மற்றும் பிற கனிமங்களை அதிக அளவில் கொண்டிருக்கின்றன. இந்தியாவில் அங்கக விவசாயிகள் இருக்கிறீர்களா? இந்தியாவில் ஆயிரம் பதிவு செய்யப்பட்ட அங்கக விவசாயிகள் உள்ளனர். ஆனால் பதிவு செய்யாமல் இயல்பாகவே, பலர் அங்கக விவசாயம் செய்து வருகின்றனர். அனைத்து அங்கக உற்பத்திப்பொருள்களும் பூச்சிக்கொல்லி இல்லாததா? கடந்த 50 வருடங்களாக, விவசாயத்தில் ரசாயன உரங்களை தேவைக்கு அதிகமாக பயன்படுத்தி வந்து உள்ளதால், தற்சமயத்தில் மழை மற்றும் நிலத்தடி நீரில் கூட ரசாயன பொருட்களின் தடயங்கள் கண்டறியப்பட்டு உள்ளன. இவ்வாறு இருக்கும் சூழ்நிலையில் அங்கக பயிர்கள் கூட, குறைந்த அளவு செயற்கை பொருட்களுக்கு உட்படுத்தப்படுகின்றன. வழக்கமான முறைகளில் உற்பத்தி செய்யப்படும் உணவுகளின் நச்சுத்தன்மையை காட்டிலும், அங்கக முறையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களில் பூச்சிக்கொல்லிகளின் நச்சுத்தன்மை அரிதாகவே கண்டறியப்பட்டது. செலவு முக்கியம் இல்லை. ஆனால் இரசாயனங்களின் அபாயகரமான விளைவுகளைப் பற்றி நுகர்வோர்களுக்கு கல்வி வாயிலாக எப்படி தெரிய செய்வது? இரசாயன வேளாண்மையிலிருந்து, அங்கக வேளாண்மைக்கு மாறும் சமயத்தில் விளைச்சல் குறைவாக கிடைக்கலாம் என்று விவசாயிகள் மத்தியில் சில நேரங்களில் அச்சம் உள்ளது. நீடித்த நிலையான வேளாண்மைக்கு மாறுவதன் மூலம் இந்த மாற்றத்தில் வெற்றி காண முடியும். முதலில் அங்கக இடுபொருட்களை ரசாயன இடுபொருட்களுடன் சேர்த்து பயன்படுத்துதல், பின்னர் ரசாயன இடுபொருட்களை கணிசமாக குறைத்து முழு அங்கக இடுபொருள்களைஎந்த வித பயிர் விளைச்சல் இழப்பும் இன்றி, பயிரின் தரம் மற்றும் சுவை மாறாமல், விளைச்சலில் முன்னேற்றம் கிடைக்குமாறு பயன்படுத்துதல் வேண்டும். ஆதாரம்: http://www.icrisat.org/vasat/learning_resources/OrganicFAQs/organic_farming.htm |
முதல் பக்கம் | திட்டங்கள் | பயிர்ச்சிகள் | மற்றவை | புகைப்படங்கள் | தொடர்புக்கு| பொறுப்புத் துறப்பு © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016 |