அங்கக வேளாண்மை :: மற்ற கேள்விகள் : கேள்வி பதில் |
மற்ற கேள்விகள் மரபணு மாற்றப்பட்ட உயிரினங்களை GMO க்களையும் அங்கக உணவு உற்பத்தியில் பயன்படுத்தலாமா? மரபணு மாற்றம் செய்யப்பட்ட உயிரினங்களுக்கு, அங்கக உணவு அல்லது விவசாயத்தில் இடமில்லை, அதனால் அவைகள் அங்கக உணவு மற்றும் வேளாண்மை நியமங்களின் கீழ் பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது என்பதை மண் சங்கம் கொள்கை குறிப்புகள் தெரிவிக்கின்றன. மரபணு மாற்றம் செய்யப்பட்ட உயிரினங்களை, அங்கக உணவு உற்பத்தி மற்றும் விலங்குகளின் தீவனங்களிலும் பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது. எப்படி அங்கக உரங்கள் பயிர் சாகுபடிக்கு பயனுள்ளதாக இருக்கிறது? அங்கக உரங்கள், மண்ணில் அங்கக தன்மையை அதிகப்படுத்துகின்றன. பயிர்களுக்கு தேவைப்படும் எளிதில் கிடைக்க கூடிய ஊட்டசத்துக்களை, அங்கக தன்மை வெளியிடுகிறது. எனினும், அங்கக உரங்கள் தாவர உணவுகளை மட்டுமே கொண்டு செல்பவை எனப் பார்க்க இயலாது. இந்த இயற்கை உரங்கள், மண்ணில் தண்ணீரை தக்க வைக்க மற்றும் களிமண்ணின் வடிகால் வசதியை மேம்படுத்த உதவுகிறது. அவைகள் மண்ணில் உள்ள ஊட்டச்சத்துக்களை கரைத்து, பயிர்களுக்கு தேவையான அங்கக அமிலங்களை வழங்குகின்றன. எப்படி அங்கக உரங்கள், ரசாயன உரங்களில் இருந்து மாறுபடுகிறது? அங்கக உரங்கள், குறைந்த ஊட்டச்சத்துகளை உள்ளடக்கியுள்ளன. எனவே அதிக அளவில் பயன்படுத்துதல் வேண்டும். எடுத்துக்காட்டாக, 25 கிலோ தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து பெற 600 லிருந்து 2000 கிலோ இயற்கை எரு தேவைப்படுகிறது. அதே அளவு தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து பெற, 50 கிலோ இரசாயன தழை, மணி மற்றும் சாம்பல் சத்து தேவைப்படுகிறது. அங்கக உரங்களில் உள்ள ஊட்டச்சத்துக்களின் அளவு இடத்திற்கு இடம் மற்றும் தயாரிப்பு முறைகளுக்கு ஏற்ப மாறுபடும். உரங்களில் உள்ள கலவைகளின் தொகுப்பு கிட்டத்தட்ட நிலையாக இருக்கும். உதாரணமாக, உலகின் எந்த இடத்தில் உள்ள தொழிற்சாலையில் யூரியா தயாரிக்கபட்டாலும், அது 46% தழைச்சத்து கொண்டிருக்கும். எவ்வளவு தாவர ஊட்டச்சத்துக்கள் அங்கக உரங்கள் மூலம் பெறப்படுகிறது? வெவ்வேறு உரங்கள், வெவ்வேறு தாவர ஊட்டச் சத்து அளவுகளை கொண்டிருக்கும். அங்கக உரங்கள், அது போல் கொண்டிருக்காது. தொழு உரம் சராசரியாக டன் ஒன்றுக்கு 12 கிலோ சத்துக்களை கொடுக்கிறது. மட்கு உரம் டன் ஒன்றுக்கு 40 கிலோ சத்துக்களை கொடுக்கிறது. பயிறு வகை பசுந்தாள் உரம் டன் ஒன்றுக்கு 20 கிலோ தழைச்சத்தை வழங்கும். ஒவ்வொரு டன் சோளம் / அரிசி / மக்காச்சோள தட்டு போன்ற ஒவ்வொன்றிலும் இருந்து 26 கிலோ சத்துக்கள் பெறப்படுகிறது. ஆதாரம்: http://www.icrisat.org/vasat/learning_resources/OrganicFAQs/organic_farming.htm |
முதல் பக்கம் | திட்டங்கள் | பயிர்ச்சிகள் | மற்றவை | புகைப்படங்கள் | தொடர்புக்கு| பொறுப்புத் துறப்பு © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016 |