organic farming
அங்கக வேளாண்மை :: மற்ற கேள்விகள் : கேள்வி பதில்

மற்ற கேள்விகள்  

அங்கக விவசாயம் என்றால் என்ன?

அங்கக  உணவு உற்பத்தி என்பது  ஒரு முறையான பண்ணை திட்டம்,இது  இயற்கை சூழ்நிலை அமைப்பை போன்று தோற்றமளிக்கும். மேலும் இதில், நன்மை தரும்  பூச்சி  மற்றும் உயிரினங்களின் சமநிலையை பராமரித்து  மண் வளத்தை மேம்படுத்த உதவுகின்றன. அமெரிக்காவில் 'அங்ககம் ' என்பது பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படும் விவசாய பொருட்களை குறிக்கின்றது. அவை யுஎஸ்டிஏ தேசிய அங்கக திட்ட  (என்ஓபி) விதியைக் கடைபிடிக்கின்றன.

எப்படி அங்கக விளைநிலங்களின் வளத்தை நிர்வகிப்பது?

அங்கக விவசாயிகள் பொதுவாக, பயிர் சுழற்சி முறையின்  மூலம் பயிர் ஊட்டச்சத்துகளை நிர்வகிக்கிறார்கள். அதில், மூடு பயிர்கள்,  தாவர மற்றும் விலங்குகளின் அங்கக  பொருட்கள், மட்கிய உர பயன்பாடு ஆகியவை அடங்கும். மண் அமைப்பு, மண்ணின் அங்கக தன்மை  மற்றும் மண்ணில் உள்ள நுண்ணுயிர்களின் எண்ணிக்கையை  முறையான  உழவு மற்றும் சாகுபடி முறைகள் மேம்படுத்துகின்றன. சுரங்க கனிமங்கள் மற்றும் ஒரு சில செயற்கை பொருட்கள், பயிர்  சத்துக்களுக்கு துணை ஆதாரங்களாக  பயன்படுத்தபடுகின்றன. ஆனால் மண், பயிர் மற்றும் நீர் மாசு பாட்டிற்கு  காரணமான  பொருட்கள்  பயன்படுத்துவது  தவிர்க்கப்பட வேண்டும்.

அங்கக  விவசாயிகள், அங்கக   பண்ணைகளில் மட்கு எரு இடும் போது, ஏதேனும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமா ?

ஆமாம். மட்கா உரம், பிற விலங்கு மற்றும் தாவரங்களின் பொருட்கள், நீர், மண் மற்றும் பயிர் மாசுபடுவதைத் தடுக்கும் வண்ணம் கவனமாக கையாள வேண்டும்.தாவர கழிவுகளை அறுவடை செய்த அதே நாள் பயன்படுத்தாமல் நன்கு மட்கிய பின்னர் பயன்படுத்த வேண்டும். மனிதர்கள் உணவாக பயன்படுத்தும்  கீரைசெடிகளை,  மட்கா உரம் இட்ட  120 நாட்களுக்கு பிறகு அறுவடை செய்து பயன்படுத்த வேண்டும். மட்கா உரம் இடப்பட்ட பிற பயிர்களை, எரு இடப்பட்ட 90 நாட்களுக்கு பிறகு அறுவடை செய்து உணவாக பயன்படுத்த வேண்டும்.

எப்படி பூச்சிகள் அங்கக  பண்ணைகளில் நிர்வகிக்கப்படுகிறது?

உயிரியல் மற்றும் பண்ணை சாகுபடி முறைகளான பயிர் சுழற்சி, பன்முகத்தன்மை, வாழ்விட மேலாண்மை, நன்மை செய்யும் பூச்சிகளை வெளியிடுதல் துப்புரவு மற்றும் நேரம் ஆகியவற்றை அங்கக பண்ணை திட்டத்தில் பயன்படுத்தி பயிர்களை பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கலாம். சில இயற்கை பொருட்களான தாவர சாறு மற்றும் சோப் போன்ற நச்சு அல்லாத செயற்கை பூச்சிக்கொல்லிகள், ஒப்பீட்டளவில் யுஎஸ்டிஏ தேசிய அங்கக தரம் மற்றும் பண்ணை திட்டதின்கீழ் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டு பயிர்களை பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கலாம். தேசிய பட்டியலில் உள்ள விதிமுறைகளை பின்பற்றி அவற்றை பயன்படுத்த வேண்டும்.

தொடர்ச்சி.....


ஆதாரம்:

http://www.icrisat.org/vasat/learning_resources/OrganicFAQs/organic_farming.htm    
www.mycorrhizae.com
www.hortsorb.com
http://kendujhar.nic.in/
http://www.greenpeace.org

 
முதல் பக்கம் | திட்டங்கள் | பயிர்ச்சிகள் | மற்றவை | புகைப்படங்கள் | தொடர்புக்கு| பொறுப்புத் துறப்பு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016