organic farming
அங்கக வேளாண்மை :: மற்ற கேள்விகள் : கேள்வி பதில்

மற்ற கேள்விகள்  

அங்கக இறைச்சி உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் விலங்குகள் எந்த ஆதாரங்களால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது?

இறைச்சிக்காக வளர்க்கப்படும் விலங்குகள் எந்த இனத்திலிருந்து வந்தாலும் கன்றின் மூன்றாவது மாத சினைப் பருவத்திலிருந்து அங்கக முறையில் வளர்க்க வேண்டும்.

கோழிப்பண்ணையில்  இருந்து  கிடைக்கும் பொருட்கள் எப்பொழுது அங்ககக் கோழிப்பண்ணைப் பொருட்களாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றன?

கோழிக்குஞ்சு பொரித்த இரண்டாவது நாளில் இருந்து அங்கக முறையில் வளர்க்கபடுகின்றன.

விவசாய நிலத்தை அங்கக உற்பத்திக்கு மாற்றும் அதே நேரத்தில், விலங்குகளை அங்கக உற்பத்திக்கு மாற்ற முடியுமா?

ஆமாம். கால்நடை செயற்பாடுகளில் எந்த நிலத்தில் விலங்குகள் மேய்கிறதோ அந்த நிலத்தை மாற்றியமைக்கலாம்.     

'அங்கக சான்றளிப்பு' என்பதின்  பொருள் என்ன?

அங்கக சான்று என்பது தேசிய அங்ககத் தரக்கட்டுப்பாட்டுத் திட்டத்திற்கு ஏற்ப உணவுப்பொருட்களை உற்பத்தி செய்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகிறது.  முன்னறிவிப்பில்லாத தொடர் ஆய்வுகள் கூட நடத்தப்படும். தேசிய அங்கக நியமங்களை உறுதி செய்யும் வகையில், பண்ணையின் அனைத்துத் துறைப் பண்ணை வசதிகள், பண்ணை நடவடிக்கைப் பதிவுகள், தொடர் மண் பரிசோதனை, நீர் போன்றவை கால ஆண்டு ஆய்வுக்குள் அடங்கும்.

வழக்கமான நிலங்களை அங்கக முறைக்கு மாற்றம் செய்ய எவ்வளவு காலம் எடுத்துக்கொள்ளும்?

நிலத்திற்கு அங்கக சான்றிதழ் பெற, நிலத்தில் அறுவடைக்கு முந்தைய மூன்று ஆண்டுகள் வரை தடை செய்யப்பட்ட பொருட்கள் எதுவும் பயன்படுத்தப்படாமல் இருக்க வேண்டும்.

ஒரு முழு பண்ணையையும் அங்கக முறைக்கு மாற்ற முடியுமா அல்லது பண்ணையின் ஒரு வயலை  மட்டும் மாற்றம் செய்ய முடியுமா?

ஒரு பண்ணையின் வயலை மட்டும் மாற்ற முடியும். எனினும், பக்கத்து வயலின் நிலங்களில் இருந்து வரும் திட்டமிடப்படாத மாசு, மழைத் தண்ணீரிலிருந்து வரும் மண்ணரிமான மாசிலிருந்து நிலத்தை பாதுகாக்க தனித்துவமான, வரையறுக்கப்பட்ட எல்லைகள் மற்றும் தடுப்பு மண்டலங்கள் அமைக்க வேண்டும். அங்கக முறையில் வளர்க்கப்பட்ட பயிர்கள் மற்றும் அங்ககம் அற்ற முறையில் வளர்க்கப்பட்ட பயிர்கள் இரண்டும் ஒன்று கலக்காமல்  இருப்பதை உறுதி செய்ய, பதிவு பராமரிப்பு, வசதிகள் பண்ணையிலேயே செய்திருக்க வேண்டும்.

தொடர்ச்சி.....


ஆதாரம்:

http://www.icrisat.org/vasat/learning_resources/OrganicFAQs/organic_farming.htm    
www.mycorrhizae.com
www.hortsorb.com
http://kendujhar.nic.in/
http://www.greenpeace.org

 
முதல் பக்கம் | திட்டங்கள் | பயிர்ச்சிகள் | மற்றவை | புகைப்படங்கள் | தொடர்புக்கு| பொறுப்புத் துறப்பு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016