organic farming
அங்கக வேளாண்மை :: மற்ற கேள்விகள் : கேள்வி பதில்

மற்ற கேள்விகள்  

எப்படி நான் ஒரு அங்கக சான்றளிப்பாளரை தொடர்பு கொள்ளலாம்?

நீங்கள் இணைய முகவரி www.tnocd.org- யில் சென்று பார்க்கலாம்.

சான்றிதழுக்கு எவ்வளவு செலவாகும்?

ஒவ்வொரு சான்றிதழ் நிறுவனமும் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் மிகவும் பொருந்தும் கட்டணத்தை அட்டவணையாக வெளியிட வேண்டும். அங்கக செயல்பாட்டின் அளவை பொறுத்து அங்கக சான்றளிப்பு கட்டணம் நிறுவனத்திற்கு நிறுவனம் கணிசமாக வேறுபடலாம். சில அரசு வேளாண்மை துறையின் கீழ் இயங்கும்  கூட்டாட்சி செலவு பங்கு திட்டத்தின் மூலம்  ஒரு குறிப்பிடத்தக்க தொகையைத் திரும்ப பெறலாம்.

அங்கக சான்றிதழ் தானாகவே அமெரிக்காவில் அங்கீகாரம் பெறப்படுகிறதா?

அனைத்து அமெரிக்க மாநிலங்கள் மற்றும் யுஎஸ்டிஏ அங்கீகாரதின் கீழ் சான்று பெற்றவர்கள், யுஎஸ்டிஏ அங்கீகாரம் பெற்ற அல்லது அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் அமைப்பாளர்கள் வழங்கப்படும் சான்றிதழ்களை ஏற்றுக் கொள்கிறார்கள். வெளிநாட்டு அரசாங்கங்கள் மற்றும் சர்வதேச சான்றிதழ் அமைப்புகளும் இதே போன்ற அங்ககத் தரத்தை ஒத்திருக்கிறது. அங்ககப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் செயலாளர்கள் தங்கள் தரத்தை உறுதிப்படுத்தும் வகையில் கூடுதல் சான்றிதழ் குறித்து வலியுறுத்தலாம். சில அமெரிக்க சான்றிதழ் நிறுவனங்கள் இந்த கூடுதல் சேவையை வழங்குகின்றன.

ஒரு பண்ணை எப்படி சான்றளிக்கப்படுகிறது?

பண்ணை செயலாளர், தேசிய அங்கக நியமங்களைப் படித்து நிலத்தின் வரலாறு, உற்பத்தி முறைகள், பண்ணையில் பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் ஆவணப்பதிவு  முறைகள் பற்றி ஒரு சுய மதிப்பீட்டை நடத்திக்கொள்ள வேண்டும். பல சந்தர்ப்பங்களில், சில நடைமுறைகள் மற்றும் அமைப்புகளுக்கு ஏற்றவாறு மாற்றம் செய்ய வேண்டும். பண்ணை செயலாளர், ஒரு அங்கீகாரம் பெற்ற சான்றளிப்பாளரைத் தேர்வு செய்து ஒரு விண்ணப்பத்தை சமர்ப்பித்து, ஆய்வு செய்து, சான்றளிப்பாளர் மூலம் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்ட நிபந்தனைகளைப் பூர்த்தி செய்து சான்றிதழைப் பெறுகின்றனர்.

"அங்கக" என்ற வார்த்தையைத் தவறாகப் பயன்படுத்தினால் அளிக்கப்படும் அபராதம் என்ன?

அங்கக உணவு உற்பத்தி சட்டம் மற்றும் தேசிய அங்கக தரத்திற்கு தெரிந்தே " அங்கக” எனப்பெயரிட்டு விற்கும் பொருட்களுக்கு  அடிப்படை விதி  மீறல் மற்றும் குற்றவியல் தடையின் கீழ் $ 10,000 அபராதம் விதிக்கப்படும்.
 
அங்கக விவசாயிகள் அங்கக விதைகளைக் கண்டிப்பாகப் பயன்படுத்த வேண்டுமா?

அங்கக முறையில்  உற்பத்தி செய்யப்படும் விதைகள், பல்வேறு ரகங்களில்  வணிக ரீதியாக கிடைக்கும் போது, அவற்றை கண்டிப்பாக  விதைக்க வேண்டும் என்று என்ஓபி விதி கோருகிறது. இயற்கை பேரழிவு அல்லது தற்காலிக மாறுபாடு நிகழ்வுகளைத் தவிர,   மற்ற நேரங்களில் ஓராண்டு பயிர்கள் எப்போதும் அங்கக முறையில் வளர்க்கப்பட வேண்டும். அங்கக உற்பத்தியில் பயன்படுத்தப்படும் விதைகள் விதை நேர்த்தி செய்யாமல் அல்லது தேசிய பட்டியலில் இருக்கும் (அதாவது நுண்ணுயிர் பொருட்கள் போன்ற) பொருட்களைக்கொண்டு விதை நேர்த்தி செய்து பயன்படுத்த வேண்டும்.  வணிக ரீதியாக கிடைக்கும் போது, விவசாயிகள் சான்றளிக்கப்பட்ட அங்கக விதைகளைப் பயன்படுத்த வேண்டும். வணிக ரீதியாக கிடைக்கும் விதைகள்  சரியான வடிவம், தரம் அல்லது அளவுகளில் கிடைக்கிறதா என்பதை சான்றளிக்கும் முகவர் மதிப்பாய்வு செய்ய வேண்டும்.

தொடர்ச்சி.....


ஆதாரம்:

http://www.icrisat.org/vasat/learning_resources/OrganicFAQs/organic_farming.htm    
www.mycorrhizae.com
www.hortsorb.com
http://kendujhar.nic.in/
http://www.greenpeace.org

 
முதல் பக்கம் | திட்டங்கள் | பயிர்ச்சிகள் | மற்றவை | புகைப்படங்கள் | தொடர்புக்கு| பொறுப்புத் துறப்பு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016