அங்கக வேளாண்மை :: மற்ற கேள்விகள் : கேள்வி பதில் |
மற்ற கேள்விகள் அங்கக முறை மேலாண்மை திட்டம் என்றால் என்ன? அங்கக சான்றிதழ் வழங்க அங்கக மேலாண்மை திட்டம், அங்கக பண்ணைத் திட்டம் அல்லது அங்கக கையாளுதல் திட்டம் தேவைப்படுகிறது. இந்த ஆவணங்கள் அங்கக நடைமுறைகள், திட்டத்தை விளக்குதல் மற்றும் திட்டத்தைக் கண்காணிப்பதற்கான ஆவணப்பதிவுகளை அடையாளம் காண உதவுகிறது. இத்திட்டம் ஆபரேட்டர் மற்றும் சான்றளிப்பாளருக்கு இடையே ஒரு பாலமாக விளங்குகிறது. பெரும்பாலான சான்றளிப்பாளர்கள் அவர்களது திட்டத்தை முன்னெடுத்துச் செல்லவும், படிவங்கள் மற்றும் வழிகாட்டல் ஆவணங்களை வழங்கவும் உதவுகின்றனர். சான்றளிக்கப்பட்ட அங்ககத் தன்மையைத் தக்க வைத்துக்கொள்ள, அங்கக மேலாண்மை திட்டத்தை ஆண்டுதோறும் புதுப்பிக்க வேண்டும். எப்படி அங்கக அமைப்பு மேலாண்மை திட்டம், மண் மேலாண்மையுடன் தொடர்புடையது? விவசாயிகள் செய்யும் உழவு மற்றும் பயிர் சாகுபடி முறைகள், பயிர் ஊட்டச்சத்து மற்றும் மண் வளத்தை மேம்படுத்துவதற்கான பயிர் சுழற்சி முறைகள், மூடாக்கு பயிர்கள் மற்றும் அங்ககப் பொருட்களின் பயன்பாடு போன்றவற்றை எதிர்மறைத் தாக்கம் இல்லாமல் செயல்விளக்கம் தர வேண்டும். தாவர ஊட்டச்சத்துக்கள், நோய்க்கிருமிகள், கன உலோகங்கள் அல்லது தடை செய்யப்பட்ட பொருட்கள் மூலம் பயிர்கள், மண் அல்லது தண்ணீரை மாசுபடுத்தாமல் மண்ணின் அங்கக தன்மை பராமரிக்கப்பட வேண்டும். விவசாயிகள் பயன்படுத்தும் விவசாய இடு பொருட்கள், அறுவடை பொருட்கள் மற்றும் சேமிப்பு வசதிகள் பற்றிய ஆவண பதிவுகளை வைத்திருக்க வேண்டும். என்ன விவசாய இடுபொருட்கள் அனுமதிக்கப்படுகின்றன மற்றும் என்ன பொருட்கள், அங்கக உற்பத்தியில் பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது? பொதுவாக, என்ஓபி இயற்கை (செயற்கை அல்லாத) பொருட்களை அனுமதிக்கிறது. அது தவிர, தேசிய பட்டியலில் உள்ள செயற்கை பொருட்களை பயன்படுத்த தடை செய்கிறது. தேசிய பட்டியல் என்றால் என்ன? தேசிய பட்டியலில் உள்ள அனுமதிக்கப்பட்ட செயற்கை மற்றும் தடை செய்யப்பட்ட இயற்கை (செயற்கை அல்லாத) பொருட்களை அங்கக உற்பத்தியில் பயன்படுத்த பொது விதிவிலக்குகள் உள்ளன. இந்த அனைத்து அனுமதிக்கப்பட்ட பொருட்களும் ஒரு விரிவான பட்டியலில் இல்லை, மாறாக அது ஒரு "திறந்த" பட்டியலில் விவரிக்கப்பட்டிருக்கிறது. 1) கால்நடை மற்றும் பயிர் உற்பத்திக்குப் பயன்படுத்தபடும் அனுமதிக்கப்பட்ட செயற்கை பொருட்கள் மற்றும் 2) கால்நடை மற்றும் பயிர் உற்பத்திக்குப் பயன்படுத்தபடும் அனுமதிக்கப்படாத செயற்கை (இயற்கை) பொருட்களைக் கொண்டுள்ளது. அங்கக விவசாயத்தில் ஒரு குறிப்பிட்ட பொருட்கள் பயன்படுத்துவதற்கு ஏற்றதாக உள்ளது என்பதை யார் தீர்மானிப்பது? பெரும்பாலான சந்தர்ப்பங்களில், சான்றிதழ் நிறுவனம் மட்டுமே ஒரு பண்ணையில் பயன்படுத்தப்படும் இடுபொருட்கள் அங்கக தரத்திற்கு உட்பட்டிருக்கிறதா அல்லது இல்லையா என்பதைத் தீர்மானிக்கிறது. ஒரு அங்கக விவசாயி திட்டத்தில் வரும் ஆண்டுகளில் என்ன இடுபொருட்கள் பயன்படுத்த வேண்டும்? அங்கக விவசாயிகள், அங்கக உற்பத்தித் தேவைகளை எதிர்நோக்கி உற்பத்தியை அடையத் தேவையான நடைமுறைகள் மற்றும் இடுபொருட்களை தீர்மானிக்க வேண்டும். ஒரு விவசாயி ஒரு பருவத்தில் பயன்படுத்த தேவையான அனைத்து உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை அங்கக பண்ணைத் திட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும். அனைத்து நிகழ்வுகளிலும், ஒரு சான்றளிக்கப்பட்ட விவசாயி பண்ணையில் பயன்படுத்தப்படும் எந்த இடுபொருட்களுக்கும் சான்றிதழ் நிறுவனத்திடம் முன் ஒப்புதல் பெற வேண்டும். ஆதாரம்: http://www.icrisat.org/vasat/learning_resources/OrganicFAQs/organic_farming.htm |
முதல் பக்கம் | திட்டங்கள் | பயிர்ச்சிகள் | மற்றவை | புகைப்படங்கள் | தொடர்புக்கு| பொறுப்புத் துறப்பு © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016 |