அங்கக வேளாண்மை :: மற்ற கேள்விகள் : கேள்வி பதில் |
மற்ற கேள்விகள் என்ன தீவன சேர்க்கைகள் மற்றும் சத்தூட்டிகள் அனுமதிக்கப்படுகிறது? இயற்கை தீவன சேர்க்கைகள் மற்றும் சத்தூட்டிகள் தவிர, தேசிய பட்டியலில் இருக்கும் ஊட்டச்சத்திற்குத் தேவையான செயற்கைப் பொருட்களான செயற்கை வைட்டமின்கள் மற்றும் தாதுப்பொருட்கள் போதுமான அளவில் பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது. அனைத்து கால்நடைகள், பாலூட்டிகள் மற்றும் கோழிகளுக்கு கறிக்கடைக்கழிவுகளை பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது. யூரியா மற்றும் மறு உணவளிக்கும் உர உணவுகள் அனைத்தும் கால்நடைகளுக்கு பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் 2005 வரை கோழிகளுக்கு பயன்படுத்தபட்டு வந்த மெதியோனைன் தவிர, மற்ற செயற்கை அமினோ அமிலங்கள் தேசிய பட்டியலில் சேர்க்கப்படவில்லை. நாம் ஒரு நோய் வாய்ப்பட்ட விலங்குகளுக்கு எப்படி சிகிச்சை அளிக்க வேண்டும்? நோய் வாய்ப்பட்ட விலங்குகளுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். ஒரு உற்பத்தியாளர், நோயுற்ற விலங்கிற்கு அளிக்கும் சிகிச்சையை நிறுத்தி வைத்திருந்தால் அதன் அங்கக நிலையைத் தக்க வைத்துக் கொள்வதற்கான உரிமம் பறிக்கபடும். ஒரு விலங்கிற்கு பயன்படுத்தும் செயற்கை மருந்து தேசியப் பட்டியலில் இல்லை என்றாலும் விலங்கின் சிகிச்சைக்குப் பயன்படுகிறது என்றால், அந்த விலங்கு அங்கக முறை விலங்காகக் கருதப்படாமல் வழக்கமான வழிகளில் விடப்படுகிறது. ஏதாவது ஒட்டுண்ணிக்கொல்லி அனுமதிக்கப்படுகிறதா? இவர்மெக்டின் என்ற ஒரே ஒரு ஒட்டுண்ணிக்கொல்லி, தேசிய பட்டியலில் உள்ளது. இது பால்பண்ணை மற்றும் இனப்பெருக்கத்தில் மட்டுமே பயன்படுத்த தடை செய்யப்பட்டு உள்ளது. மேலும், ஒட்டுண்ணிக்கொல்லிகள் இறைச்சிக்கடைகளில் பயன்படுத்தத் தடை செய்யப்பட்டுள்ளது. தேசிய அங்கக திட்டத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அங்ககப் பொருட்களைக் கண்டறிய EPA, ஒரு தன்னார்வ அடையாள குறியீடு திட்டத்தை நிறுவியுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட பூச்சிகொல்லிகள் அங்கக உற்பத்தியில் அடையாளக்குறியீட்டுடன் பயன்படுத்த அனுமதி உள்ளது. "சான்றளிக்கப்பட்ட அங்ககப்பொருள்” என்றால் என்ன? "சான்றளிக்கப்பட்ட அங்ககப்பொருள்” என்றால், தீவிர அங்கக விதி முறைகளை பின்பற்றி வளர்க்க பட்டு, அவற்றின் தரத்தை அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலம் சரிபார்த்தல் ஆகும். சான்றளிப்பில், விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்கள் பொருட்களின் தரங்களை உறுதி செய்வதற்காக விவசாய பண்ணை வயல்கள் மற்றும் பதப்படுத்தும் இடங்களை சோதனை செய்தல், விரிவான பதிவுகள் வைத்திருத்தல், ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் மண் மற்றும் நீர் சோதனை செய்தல் ஆகியவை அடங்கும். ஆதாரம்: http://www.icrisat.org/vasat/learning_resources/OrganicFAQs/organic_farming.htm |
முதல் பக்கம் | திட்டங்கள் | பயிர்ச்சிகள் | மற்றவை | புகைப்படங்கள் | தொடர்புக்கு| பொறுப்புத் துறப்பு © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016 |