organic farming
அங்கக வேளாண்மை :: மண்புழு உரம் : கேள்வி பதில்

மண்புழு உரம் 

மண்புழு உரம் என்றால் என்ன?

மண்புழு உரம் என்பது, மண்புழுக்கள் உற்பத்தி செய்யும் அங்கக உரத்தைக் குறிக்கிறது. அது புழு வார்ப்புகள் (கழிவு பொருட்கள்), மட்கிய அங்கக பொருட்கள், உயிருள்ள மண்புழுக்கள், பட்டுக்கூடு மற்றும் பிற உயிரினங்கள் உள்ளடக்கிய ஒரு கலவையாகும். மண் புழு உரம் தயாரிப்பு, நச்சு அல்லாத திட மற்றும் திரவ அங்கக  கழிவுகளை மட்க செய்வதற்கான  ஒரு சரியான பயனுள்ள, செலவு குறைந்த மற்றும் திறமையான மறுசுழற்சி தொழில்  நுட்பமாகும்.

மண்புழு வளர்ப்பு என்றால் என்ன?            

மண்புழு வளர்ப்பு என்பது மண்புழுக்களை வளர்த்தல் என்று வரையறுக்கப்படுகிறது. மண்புழுக்கள், இரண்டு குழுக்களாக பிரிக்கப்படுகிறது. மட்கிய எரு உருவாக்குபவை மற்றும் மட்கிய பொருட்களை உண்ணுபவை என வரையறுக்கப்படுகிறது. முதல் குழு மேற்பரப்பில் குடியிருந்து கிட்டத்தட்ட 90% அங்கக பொருட்களை உண்ணுகின்றன. அவைகளின் நிறம் பொதுவாக கறுப்பாக இருக்கும். மேலும் எபிஜீயிக் அல்லது கழிவுப் பொருட்களை உண்ணும் மண்புழுக்கள் என அழைக்கப்படுகின்றன.  பொதுவாக இந்த மண்புழுக்கள் மண்புழு உரம் தயாரிக்க உதவுகின்றன. இரண்டாவது குழு, மட்கிய பொருட்களில் துளையிடும் புழுக்கள், உரம் தயாரிப்பிலும் மற்றும் மண்ணை இளக வைத்தலிலும் பயன்படுகின்றன. பொதுவாக, துளையிடும் புழுக்கள் மண்ணில் மட்கிய உரத்தைக் கலந்து விநியோகிப்பதில் உதவும்.

மண்புழுக்கள் விரைவாகவும் திறமையாகவும் அங்கக கழிவுகளை சிதைக்கும் என்று நிரூபிக்கப்பட்டது. எனினும், மண்புழு உரமாக்கல் திறனை அதிகரிக்க, கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். புழுக்கள் உயிர்ப்புடன் நன்கு செழித்து வளர ஈரப்பதம் மற்றும் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப, இனப்பெருக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மண்புழு உரமாக்கலில் மிகவும் நன்மை உடைய அம்சம் என்னவென்றால், அங்ககக் கழிவுகள் அழுகும் போது, ஏற்படும் துர்நாற்றத்தை நீக்குகிறது, இது ஒரு முழு காற்று உட்புகும் அமைப்பு ஆகும். மண்புழு பற்றிய கருத்து, இந்த நூற்றாண்டின் 50 களில் நன்றாக அறியப்பட்டது. மேற்கு ஐரோப்பிய நாடுகளில் நல்ல வசதிகள் செய்யப்பட்டு மண்புழுக்கள் அதிகமாக இனப்பெருக்கம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள் அங்கக கழிவுகளை திறமையாக அகற்ற, மண்புழு தொழில்நுட்பம் தொடர்பான பல பரிசோதனைகளை மேற்கொண்டது.

மண்புழுக்கள் எப்படி வேலை செய்கிறது?

மண்புழுக்கள் தங்கள் உணவை, தங்கள் உடல் எடையைப் போல இரண்டு முதல் ஐந்து மடங்கு எடுத்துக்கொள்ளும்.

அவைகள் தங்கள் வளர்ச்சிக்கு, ஒரு சிறிய அளவு கழிவு பொருட்களை உட்கொள்ளும். பின்னர் வெர்மிகாஸ்ட்ஸ் என்ற சளி பூசிய ஜீரணமாகாத பகுதியை வெளியேற்றும். மண்புழு எடுத்துக் கொள்ளும் உணவானது, பல்வேறு இயற்பியல் மற்றும் வேதியியல் மாற்றங்களுக்குட்பட்டு, அதனுடைய உணவுக்குழாயில் அரைக்கப்பட்டு, அங்ககப் பொருட்களை மண்புழு உரமாக மாற்றுகிறது. மண்புழு உரத்தில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் தாவரங்களினால் எடுத்துக் கொள்ளப்படும் மற்றும் நீரில் எளிதில் கரையும் பொருளாக உள்ளது. மண்புழு உரதில், நுண்ணூட்ட மற்றும் பேரூட்ட சத்துகள், வைட்டமின்கள், என்சைம்கள், உயிர் எதிர்ப்பு பொருள், வளர்ச்சி ஹார்மோன்கள் மற்றும் நுண்ணுயிர்கள் அடங்கி உள்ளன.

தொடர்ச்சி.....


ஆதாரம்:

http://www.icrisat.org/vasat/learning_resources/OrganicFAQs/organic_farming.htm    
www.mycorrhizae.com
www.hortsorb.com
http://kendujhar.nic.in/
http://www.greenpeace.org

 
முதல் பக்கம் | திட்டங்கள் | பயிர்ச்சிகள் | மற்றவை | புகைப்படங்கள் | தொடர்புக்கு| பொறுப்புத் துறப்பு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016