organic farming
அங்கக வேளாண்மை :: மண்புழு உரம் : கேள்வி பதில்

மண்புழு உரம் 

மண்புழு பண்ணை தொடங்கிய சில வாரங்களுக்கு பின்பு, மண்புழுக்கள் கழிவு  பொருட்களை சாப்பிடவில்லை, ஏன்?

முதலில் ஒரு புதிய மண்புழு பண்ணை தொடங்கும் போது, புழுக்கள் தங்கள் புதிய சூழலை பயன்படுத்தி கொள்ள கொஞ்ச காலம் எடுத்து கொள்ளும். மேலும் முதலில் படுக்கையின்  அடியில் உள்ள பொருளை சாப்பிட தொடங்கும். ஆனால் பின்னர் புழுக்கள்  விரைவாக  புதிய உணவு பொருளை நோக்கி செல்லும். இவ்வாறு புழுக்கள் நகரும் போது,  நீங்கள் புதிய கழிவு  பொருட்களை தேவையான  அளவில் சேர்க்க வேண்டும். பின்னர் தொடர்ந்து  கழிவுகளை சேர்க்கலாம்.

நான் எதாவது  தவறாக செய்யும் போது, என் புழுக்கள் தப்பிக்க முயற்சி செய்யும். புழுக்கள் வாழ தகுந்த  சூழ்நிலை அமைய வில்லை என்றால் அவை திரளாக உரக்குவியலை  விட்டு வெளியேற  முயற்சி செய்யும். மண் புழுக்களின் தீவனம், படுக்கையின் ஈரப்பதம்,  படுக்கை பொருளின் அமில கார தன்மை போன்ற காரணத்தினால் மண்புழுக்கள் வெளியேற தொடங்கும். இதே நிலை தொடர்ந்து  நடக்கிறது என்றால், அதற்கு காரணமான பொருட்களை, நீங்கள் திரும்பிச் சென்று சரிபார்க்க வேண்டும். இந்தப் பிரச்சினைகள் விரைவாகவும், எளிதாகவும் பல புழுக்கள் அழியாமல் நடந்து விடும்.

நான் விடுமுறை நாட்களில் இருக்கும் போது, புழுக்கள் பட்டினியால் இறந்து விடுமா?

இல்லை. ஆனால் எந்தப் புதிய உணவுப் பொருளையும் சேர்த்தலைத் தவிர்த்தல் வேண்டும். ஈரமான செய்தித்தாள் அல்லது ஹெஸ்ஸியன் (சாக்கு) கொண்டு படுக்கை மேற்பரப்பு, உலர்ந்து விடாமல் மூடி வைக்க வேண்டும். மட்பாணையில் தண்ணீர்   எடுத்து மூடியை வைத்து மூடி, பாதி தோண்டிய குழி அல்லது தொட்டிகளில் புதைத்து வைக்க வேண்டும். சுற்றியுள்ள பொருட்கள் காய்ந்தாலும் கூட, மண்புழுக்கள் இந்த ஈரமான தொட்டிகளின் கீழே சென்று இருக்கக் கூடும். நீங்கள் நீண்ட நேரம் வெளியூர் போகத் திட்டமிட்டால் (மாதம் அல்லது அதற்கு மேற்பட்ட) நீங்கள் விலகி இருக்கும் நேரம், உங்கள் புழுக்களை பார்த்துக்கொள்ள நண்பர் அல்லது பக்கத்து வீட்டுக்காரரிடம் சொல்லி விட்டு செல்லலாம்.

நான் புழுவைப் பாதியாக வெட்டினால் இரண்டு புழுக்கள் கிடைக்குமா?

இல்லை. எனவே உங்கள் படுக்கையைத் திருப்பும் போது, புழுக்கள் துண்டாகாமல்,  மிகவும் கவனமாக கையாள வேண்டும்.

எவ்வாறு உள்நாட்டு மண்புழுக்களை சேகரிப்பது?

மண் மேற்பரப்பில் தெரியும் மண்புழு மூலம் மண்புழு வசிக்கும் இடம் எது என்று அடையாளம் கண்டு கொள்ளலாம். 20-லிட்டர் தண்ணீரில், 500 கிராம் வெல்லம் (நாட்டு சர்க்கரை) மற்றும் 500 கிராம் புதிய கால்நடை சாணத்தைக் கரைக்க வேண்டும்.1 மீ x 1 மீ. பரப்பில் தெளிக்க வேண்டும். வைக்கோல் கொண்டு மூடி, மாட்டு சாணக் கட்டிகளை விட்டு, ஒரு பழைய சாக்கு பை கொண்டு  மூடி விட வேண்டும். 20-முதல் 30 நாட்கள் வரை தண்ணீர் விடவும். எபிஜீயிக் மற்றும் அநிசிக் நாட்டுப் புழுக்கள் ஒரு கூட்டாக சேகரிக்கப்பட்டு பயன்படுத்த முடியும்.

எவ்வாறான சுற்றுச் சூழ்நிலை புழுக்களுக்கு பிடிக்கும் ?

மண் புழுக்களின் உர சூழ்நிலையானது, அமில-கார தன்மை நடுநிலை, காற்று வெப்பநிலை- 25ºC, காற்று ஈரப்பதம்-70% மற்றும் 70% - 90% மண் ஈரம் கொண்டிருக்க வேண்டும். மண்ணில் பெரிய துகள்கள் இருந்தால், மண் காற்றோட்டமாக இருப்பதை  உறுதி செய்கிறது. அதே போல், மண்ணில் உரமாக்க படாத, நன்கு தூளக்கபட்ட அங்கக உணவு பொருட்கள் இருப்பதையும் இது குறிக்கிறது.

தொடர்ச்சி.....


ஆதாரம்:

http://www.icrisat.org/vasat/learning_resources/OrganicFAQs/organic_farming.htm    
www.mycorrhizae.com
www.hortsorb.com
http://kendujhar.nic.in/
http://www.greenpeace.org

 
முதல் பக்கம் | திட்டங்கள் | பயிர்ச்சிகள் | மற்றவை | புகைப்படங்கள் | தொடர்புக்கு| பொறுப்புத் துறப்பு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016