organic farming
அங்கக வேளாண்மை :: அங்கக ஆவணங்கள்

பங்கேற்பு உத்தரவாத அமைப்பின், அங்கக உற்பத்திக்கான தேசிய தரநிலைகள்

தேனி  வளர்ப்பிற்கான தரநிலை தேவைப்பாடுகள் :

கால்நடை வளர்ப்பில் தேனி வளர்ப்பு ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது. கால்நடை வளர்ப்பில் பயன்படுத்தப்படும் பொதுவான கருத்துகள் தேனி வளர்ப்பிலும் பயன்படுத்தப்படுகிறது. இது தவிர கீழ்க்கண்ட தேவைகளும் அவசியமாகிறது.

  • தேன் கூடுகள் எந்த வித நச்சுத்தன்மை கொண்ட பொருட்களும் இல்லாமல், இயற்கையான பொருட்களைக்கொண்டு அமைக்க வேண்டும்.
  • அங்கக முறையில் பராமரிக்கப்பட்ட பண்ணை அல்லது இயற்கைப்பகுதிகள், தடை செய்யப்பட்ட பொருட்கள் பயன்படுத்தப்படும் நிலங்களுக்கு அருகில் இல்லாமல் தேன் கூடுகள் அமைக்க வேண்டும்.
  • தேனி வளர்ப்பில் கால்நடை மருந்துகள் அல்லது எதிர் உயிர் பொருட்கள் உபயோகிக்கக் கூடாது. தேன் கூட்டில் வரும் பூச்சி மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்த காஸ்டிக் சோடா, லாக்டிக், ஆக்ஸாலிக், அசிடிக், பார்மிக் அமிலங்கள், சல்பர், எத்திரிக் ஆயில் மற்றும் பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ் பயன்படுத்தலாம்.
 

முதல் பக்கம் | திட்டங்கள் | பயிர்ச்சிகள் | மற்றவை | புகைப்படங்கள் | தொடர்புக்கு| பொறுப்புத் துறப்பு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2009-16